பாட்னா: பீகாரில் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று 17 வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம்.
சட்டசபை அமர்வின் முதல் நாளிலேயே சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அசிதுதீன் ஒவைசியின் AIMIM கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ அக்தருல் இமான், பதவிபிரமாணம் செய்யும் போது இந்துஸ்தான் என்ற வார்த்தையை கூற மாடேன் என ஆட்சேபித்தார். மேலும், இந்துஸ்தானுக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தையையும் பயன்படுத்தினார். இதை சட்டசபையில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் எதிர்த்தன.
பாஜக எம்எல்ஏ பிரமோத் குமார், இந்துஸ்தான் என கூறுவதை எதிர்க்கும் மனநிலை கொண்டவர்கள் இந்த நாட்டில் இருப்பது துரதிர்ஷ்டமான விஷயம் என்று கூறினார். அத்தகையவர்களை பொதுமக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார். ஐக்கிய ஜனதா தளத்தை எம்.எல்.ஏ மதன் சாஹ்னி, அய்ம் எம்.எல்.ஏ அப்படி எதுவும் சொல்லவில்லை என்று கூறினார்.
ஐக்கிய ஜனதா தள சட்ட மன்ற உறுப்பினர் கூறுகையில், 5 மொழிகளில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளாலாம் என்றார். எல்லா மொழிகளிலும் இந்தியா பாரதம் என எழுதப்பட்டுள்ளது, ஆனால் உருது மொழியில் பாரதம் என்பதற்கு பதிலாக ஹிந்துஸ்தான் என உருது மொழியில் எழுதப்பட்டுள்ளது, அது சரியானதா இல்லையா என்று மட்டுமே அவர் கேட்டார் என கூறினார்.
இந்துஸ்தான் என்ற வார்த்தையை யாரும் எதிர்க்கக்கூடாது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சங்கர் கூறினார்.
மேலும் படிக்க | அசாதுதீன் ஒவைசி இந்துத்துவா குறித்து பதிவிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR