PAN - Aadhaar எண்ணை இணைக்க இந்தாண்டு இறுதிவரை கெடு...

இந்த ஆண்டு இறுதிக்குள் உங்கள் PAN எண்ணை, Aadhaar உடன் இணைப்பது கட்டாயம் என்று வருமான வரித்துறை இன்று ஒரு பொது செய்தியில் தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 16, 2019, 02:25 PM IST
PAN - Aadhaar எண்ணை இணைக்க இந்தாண்டு இறுதிவரை கெடு... title=

இந்த ஆண்டு இறுதிக்குள் உங்கள் PAN எண்ணை, Aadhaar உடன் இணைப்பது கட்டாயம் என்று வருமான வரித்துறை இன்று ஒரு பொது செய்தியில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்., “வருமான வரி சேவைகளின் தடையற்ற நன்மைகளைப் பெறுவதற்கு, முக்கிய இணைப்பை 2019 டிசம்பர் 31-க்கு முன் பூர்த்தி செய்யுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளது.

காலக்கெடு முடிவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட பொது செய்தியின்படி, உங்கள் PAN எண்ணை, Aadhaar உடன் இணைப்பது கட்டாயமாகும். நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) இந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கிய உத்தரவின் மூலம் நீட்டிக்கப்பட்டது. முன்னதாக, இந்த இணைப்பிற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள்  PAN, Aadhaar இன்னும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உறுதிப்படுத்த I-T இணையதளத்தில் உள்ள இணைப்பு ஆதார் நிலை பக்கத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம். இணைப்பில் இல்லாவிடில் உங்கள் PAN மற்றும் Aadhaar எண்ணினை இந்த வலைதளத்தில் இணைக்கலாம்.

CBDT வருமான வரித் துறைக்கான கொள்கையை உருவாக்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில், மையத்தின் முதன்மை ஆதார் திட்டத்தை அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்ததோடு, I-T வருமானத்தை தாக்கல் செய்வதற்கும், PAN ஒதுக்கீடு செய்வதற்கும் biometric ID கட்டாயமாக்கியது.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA(2), ஜூலை 1, 2017 நிலவரப்படி PAN வைத்திருக்கும், மற்றும் ஆதார் பெற தகுதியுடைய ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது.

இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் வழங்கப்படுகிறது, மேலும் PAN என்பது ஒரு நபர், நிறுவனம் அல்லது நிறுவனத்திற்கு I-T துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்து குறியீடு ஆகும்.

Trending News