முதல் காலாண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவீதம்

Last Updated : Feb 28, 2017, 07:19 PM IST
முதல் காலாண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவீதம் title=

2016-2017 ஆண்டில் நாட்டின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவி்த்தார்.இந்நிலையில், 2016-17 ஆண்டில் நாட்டின் முதல் காலாண்டு உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 7.1% ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டு வளர்ச்சி 7.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால் தற்காலிக பணத்தட்டுபாடு நிலவியது. இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் பணத் தட்டுபாட்டால் பொருளாதார வளர்ச்சியில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. அடுத்தடுத்த காலாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்

FY2016-17 (Second advance)    7.1
Q12016-17(April-June) (Revised)    7.2
Q2 2016-17(July-Sep) (Revised)    7.4
Q3 2016-17(Oct-Dec) (Revised)    7

 

Agency Inputs

Trending News