தனது சீனப் பிரதிநிதியை ராஜ்நாத் சிங் சந்திப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை...

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சீனப் பிரதிநிதியை சந்திக்க இருப்பதாக வெளியான தகவலை இந்தியா மறுத்து உள்ளது.

Last Updated : Jun 24, 2020, 08:50 AM IST
  • மாஸ்கோவில் நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்பில் இன்று அமைச்சர் கலந்து கொள்கிறார் என்று சீன அமைச்சகமான குளோபல் டைம்ஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
  • மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ் நாத் சிங் தனது சீன பிரதிநிதி வெய் பெங்கி-யை சந்தித்து பேசுவார் எனவும் சீன ஊடகம் குறிப்பிட்டிருந்தது.
  • இந்த செய்தி வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, பாதுகாப்பு அமைச்சகம் சீன பிரதிநியுடனான சந்திப்பு குறித்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது.
தனது சீனப் பிரதிநிதியை ராஜ்நாத் சிங் சந்திப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை... title=

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சீனப் பிரதிநிதியை சந்திக்க இருப்பதாக வெளியான தகவலை இந்தியா மறுத்து உள்ளது.

மாஸ்கோவில் நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்பில் இன்று அமைச்சர் கலந்து கொள்கிறார் என்று சீன அமைச்சகமான குளோபல் டைம்ஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சீன பிரதிநிதி வெய் பெங்கி-யை சந்தித்து பேசுவார் எனவும் சீன ஊடகம் குறிப்பிட்டிருந்தது. இந்த செய்தி வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பாதுகாப்பு அமைச்சகம் சீன பிரதிநியுடனான சந்திப்பு குறித்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது.

READ | இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த சதி செய்கிறதா சீனா?

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கட்கிழமை நடந்த வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முறையான சந்திப்பு நடைபெறவில்லை.

முன்னதாக கடந்த வாரம், வெளியுறவு துறை அமைச்சர் S.ஜெய்சங்கர் தனது சீன பிரதிநிதி வாங்-யியுடன் லடாக் தொடர்பாக தொலைபேசி உரையாடலை மட்டுமே நடத்தினார்.

உரையாடலின் போது, ​​முன்னோடியில்லாத இந்த வளர்ச்சி "இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றும், சீனா அதன் நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்து சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க இரு தரப்பும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடைப்பெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்ட உயர் மட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் மோல்டோவில் நடைப்பெற்றது. சுமார் 11 மணி நேரம் நடைப்பெற்ற இந்த பேச்சுவர்த்தைக்கு பின்னர் கிழக்கு லடாக்கில் இருந்து பின்வாங்க சீன இராணுவம் ஒப்புக்கொண்டது.

READ | கிழக்கு லடாக்கில் இருந்து பின்வாங்க சீன இராணுவம் ஒப்புக் கொண்டதாக தகவல்!

இந்த உயர்மட்ட கூட்டத்தில், இந்திய தூதுக்குழு சீனாவுடன் வலுவான வலியுறுத்தல்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது சீன துருப்புக்கள் நடத்திய 'முன்னோடியில்லாத' தாக்குதல் ஒரு திட்டமிட்ட தாக்குதல், மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள அனைத்து புள்ளிகளிலிருந்தும் சீன துருப்புக்களை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியது. மேலும், இரு தரப்பு இராணுவமும் பாங்காங் த்சோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து துருப்புக்களை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை வகுக்க இந்த கூட்டம் நடைப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Trending News