இந்தியாவின் குண்டு ஊசி அளவு நிலம் கூட விட்டு தரப்படவில்லை : ITBP டைரக்டர் ஜெனரல்

இந்தியாவின் நிலப்பரப்பை பாதுகாக்கும் திறன் இராணுவத்திற்கு முழுமையாக உள்ளது

Last Updated : Jul 12, 2020, 07:27 PM IST
  • கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலை தொடர்ந்து, இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே பதற்றம் அதிகரித்தன
  • இந்தியாவின் வலுவான நிலைப்பட்டினால், சீன படைகள் பின்வாங்கின
  • இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன
இந்தியாவின் குண்டு ஊசி அளவு நிலம் கூட விட்டு தரப்படவில்லை : ITBP டைரக்டர் ஜெனரல்  title=

இந்தியாவின் குண்டு ஊசி அளவு நிலம் கூட விட்டு தரப்படவில்லை என ITBP டைரக்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

ஹரியானா (Haryana): நாட்டின் அனைத்து நிலப்பரப்பும் நம்மிடையே உள்ளன இந்திய திபெத் எல்லைக் காவல்படை (ITBP) மற்றும் எல்லை காவல் படையின் (BSP) டைரக்டர் ஜெனரல் சுர்ஜித் சிங் தேஸ்வால் கூறினார். அவர் இந்தியா-சீனா இடையில்  உள்ள LAC பகுதியில் கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து கூறுகையில் இந்த தகவலை கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவிற்கு தனது நிலப்பரப்பை பாதுகாத்துக் கொள்ளும் திறன் முழுமையாக உள்ளது என்றார். மேலும், நிலைமை மேம்பட்டு வருகிறது என்றும் ராணுவ நிலையிலும், ராஜீய நிலையிலும், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.

ALSO READ | பாகிஸ்தானை தாண்டி பலிக்காத சீனாவின் நரித் தந்திரம்: ஒரு அலசல்

அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் கையாளும் திறன் நமது நாட்டிற்கும் நாட்டு படையினருக்கும் உள்ளது என்றார் அவர்.

இந்தியா மற்றும் சீனா இடையே உள்ள எல்லை பதற்றங்களை நீக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்திய திபெத் எல்லை காவல் படை டைரக்டர் ஜெனரல் திரு.சிர்ஜித் சிங் தேஸ்வாலின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது

முன்னதாக ஜூன் 15-16ம்  தேதிகளில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா சீனா இடையே எல்லை பதற்றம் அதிகரித்தது.

முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சீன படைகள் பின்வாங்கின.

ALSO READ இந்தியாவுடான எல்லை மோதலுக்கு சீனா கொடுத்த விலை என்ன…!!!

இந்திய சீன எல்லையில் கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக்கொள்ள இந்தியா மற்றும் சீனா இரண்டும் ஒப்புக்கொண்டுள்ளன என்று அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் சனிக்கிழமையன்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்

இணையம் வழியாக நடைபெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான குளோபல் வீக் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Trending News