இந்தியாவில் எகிறும் தொற்று பாதிப்புகள்; அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள மத்திய அரசு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 புதிய கோவிட் -19 தொற்றுகளுடன் இந்தியா 66% அதிக அளவிலான புதிய தொற்று எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 20, 2022, 11:33 AM IST
  • நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 186.90 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • கடந்த 24 மணி நேரத்தில், இந்தியா 2,067 புதிய நோய்த் தொற்றுகளை பதிவு செய்துள்ளது .
இந்தியாவில் எகிறும் தொற்று பாதிப்புகள்; அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள மத்திய அரசு title=

இந்தியாவில் கோவிட் -19 தொற்று பாதிப்புகள், தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயமகா உள்ளது. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் 2,000 க்கு மேல் உயர்ந்துள்ளது என்று அரசாங்கம் புதன்கிழமை வெளியிட்ட தரவு கூறுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியா 2,067 புதிய நோய்த் தொற்றுகளை பதிவு செய்துள்ளது . இது முந்தைய நாளை விட 66 சதவீதம் அதிகம். 40 புதிய கோவிட் இறப்புகளும் பதிவாகியுள்ளன.

சிகிச்சையில் உள்ள கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை புதன்கிழமை 480 என்ற அளவில் அதிகரித்து தற்போது இந்த எண்ணிக்கை 12,340 அல்லது 0.03 சதவீதமாக உள்ளது. 1,547 பேர் குணமடைந்துள்ளனர். நோயிலிருந்து மீண்டவர்களின் மொத்த மீட்பு எண்ணிக்கை 4,25,13,248 ஆக உள்ளது. குணமடையும் விகிதம் இப்போது 98.76 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.21 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு செவ்வாயன்று ஐந்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் தொற்று பரவுவதைக் கண்காணித்து அதற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அதிகரிக்கும் கொரோனா... மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்?

மேலும் கேரள மாநிலத்திற்கு எழுதிய கடிதத்தில், " அதிகரிக்கும் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் பயனுள்ள கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை" மாநிலங்கள் மேற்கொள்ல வேண்டியதன் அவசியத்தையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

இதற்கிடையில், தலைநகரில் செவ்வாய்க்கிழமை 632 கோவிட் -19 வழக்குகள் பதிவான நிலையில், தில்லி மாவட்ட மேலாண்மை ஆணையத்தின் (DDMA) மூத்த அதிகாரிகள் இன்று மாஸ்க் அணிவதை கட்டயாப்படுத்தும் விதிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் NCR மாவட்டங்களில் முகமூடியை மீண்டும் கட்டாயமாக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஹரியானா அறிவித்துள்ளது.

நேற்று 17.2 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன. அதில் 24,000 க்கும் மேற்பட்டவை 60 வயதுக்குட்பட்ட பெரியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பூஸ்டர் டோஸ்கள். நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 186.90 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | Amway India மோசடி; ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News