ரூபாய் நோட்டு ஒழிக்கும் நடவடிக்கை இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி தரும்- மோடி

பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் முதன்முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி  உரையாற்றி வருகிறார்.

Last Updated : Nov 27, 2016, 01:14 PM IST
ரூபாய் நோட்டு ஒழிக்கும் நடவடிக்கை இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி தரும்- மோடி title=

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் முதன்முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி  உரையாற்றி வருகிறார்.

இன்று இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி:-

கருப்புப் பணத்தை மாற்ற ஏழை மக்களை பயன்படுத்தி வருபவர்களையும், மக்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் வன்மையாக கண்டித்தார்.

ஏழை மக்கள், விவசாயிகள், கூலி தொழிலாளைகள் உள்ளிட்ட சமூகத்தில் அதிக அளவிலான மக்களுக்கு பயன் தருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கணக்கில்வராத பணத்திலிருந்து விடுபடுவதற்காக ஏழை மக்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என்றும் அவர் பேசினார்.

ரூபாய் நோட்டு வாபசால் ஏற்பட்ட பிரச்னைகளை புரிந்து கொள்கிறேன். ஆனால், இந்தியாவை கடந்த 70 ஆண்டுகளாக பாதித்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிதானது அல்ல.

ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு என்பது பெரியது. இதன் பாதிப்பிலிருந்து வெளிவர 50 நாளாகும்.

உலகம் மற்றும் பொருளாதார அமைப்புகள் நமது சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறது நம்மை பின்பற்றுகின்றன.

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் முடிவு என்பது அவ்வளவு எளிதானது அல்ல, ஆனால், இந்த நடவடிக்கை இறுதியில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும். இதனால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் எனக்கு புரிகிறது.

இங்குள்ள மக்களின் முடிவு நமது நாட்டை புதிய சக்தியாக உருமாற்றும் என்று நான் நம்புகிறேன். 

கடந்த வருடத்தை விட அதிக விதைகள் உரங்கள் வாங்குவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்று வழி கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ரூபாய் நோட்டு வாபசால் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பல பலன்கள் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். அரசுக்கும், இந்தியாவுக்கும் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்.

ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்குகளை அவர்கள் பயன்படுத்த நீங்கள் துணைபோக கூடாது என்று பிரதமர் பேசினார்.

Trending News