இந்திய சீன துருப்புகளுக்கு இடையில் லடாக்கின் பேங்காங் பகுதியில் மோதல் வெடித்தது..!!

ஆகஸ்ட் 29-30ம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் லடாக்கில் (Ladakh) எல்ஏசி (LAC)பகுதிக்கு, அதாவது லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் அருகில் பாங்காங்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே புதிதாக மோதல்கள் வெடித்தன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2020, 01:13 PM IST
  • கல்வான் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து லடாக்கில் இந்திய ஆயுதப்படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன
  • சீனாவின் சதி நடவடிக்கைகளுக்கு "பொருத்தமான" பதிலடி கொடுக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது
இந்திய சீன துருப்புகளுக்கு இடையில் லடாக்கின் பேங்காங் பகுதியில் மோதல்  வெடித்தது..!! title=

கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி, லடாக்கின் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை பதற்றம் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஆகஸ்ட் 29-30ம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் லடாக்கில் (Ladakh) எல்ஏசி (LAC)பகுதிக்கு, அதாவது லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் அருகில் பாங்காங்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே புதிதாக மோதல்கள் வெடித்தன. 

ஆனால், இந்தியா தொடர்ந்து சீனாவின் சதியை முறியடித்து, இந்தியப் படைகள் கடுமையாக பதிலடி கொடுத்தன. இந்திய துருப்புக்கள் போங்காங் த்சோ ஏரியின் (Pangong Tso lake) தெற்கு கரையில் தனது நிலைகளை வலுப்படுத்த திறமையான நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இந்த பிரச்சனையை தீர்க்க, தற்போது சுஷூலில் (Chushul)  பிரிகேட் காமாண்டர் நிலையில்  சந்திப்பு நடந்து வருகிறது.

கல்வான் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து லடாக்கில் இந்திய ஆயுதப்படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்களுக்குப் பிறகு, எல்.ஏ.சி பகுதியில் சீனாவின் சதி நடவடிக்கைகளுக்கு "பொருத்தமான" பதிலடி கொடுக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்கள் எல்.ஐஏ.சி மற்றும் பிற முன்னணி நிலைகளில்  துருப்புகள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | சீனாவின் எதிர்ப்பை மீறி தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்...!!!

கல்வான் மோதல்களுக்குப் பின்னர், இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக  இந்தியாவும் சீனாவும் பல சுற்று இராணுவ மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை நடத்தியது. ஆனால் பிராந்தியத்தில் இதுவரை முழுமையாக படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. புதுடெல்லி தனது பிராந்திய ஒருமைப்பாட்டில் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதை பெய்ஜிங்கிற்கு தெளிவுபடுத்தியுள்ளது.  சீனா தனது படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்தியா கோருகிறது.

மேலும் படிக்க | Sweden Riots: பற்றி எரியும் ஸ்வீடன்... பிரச்சனைக்கு காரணம் என்ன..!!!

Trending News