உலகின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு தேர்வை முடித்தது இந்தியன் ரயில்வே!

உலகின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பயிற்சிகளில் ஒன்றை இந்திய ரயில்வே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உதவி லோகோ பைலட்டுகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் 64,000 பதவிகளை நியமிக்க சுமார் 47.45 லட்சம் பேரை கொண்டு ஒரு தேர்வு நடத்தியுள்ளது.

Updated: Nov 12, 2019, 10:23 AM IST
உலகின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு தேர்வை முடித்தது இந்தியன் ரயில்வே!

உலகின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பயிற்சிகளில் ஒன்றை இந்திய ரயில்வே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உதவி லோகோ பைலட்டுகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் 64,000 பதவிகளை நியமிக்க சுமார் 47.45 லட்சம் பேரை கொண்டு ஒரு தேர்வு நடத்தியுள்ளது.

அறிக்கைகளின்படி, 63,000-க்கும் மேற்பட்ட Level I பதவிகளுக்கு சுமார் 1.17 கோடி வேட்பாளர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இது முன்பு Group D சேவைகள் என்று அழைக்கப்பட்ட பதவிகள் ஆகும். அதேவேளையில் டிப்போட் மெட்டீரியல் சூப்பிரண்டு (DMS) மற்றும் கெமிக்கல் மெட்டாலஜி அசிஸ்டென்ட் (CAM) ஆகிய 13,500-க்கும் மேற்பட்ட மேற்பட்ட ஜூனியர் இன்ஜினியர் (JE ) பதவிக்கு, 24.75 லட்சம் வேட்பாளர்கள் ஆஜரானார்கள்.

ஆட்சேர்ப்புச் செயல்பாட்டின் போது பாதுகாப்பு மற்றும் நிகழ்தகவுக்கான மிக உயர்ந்த அளவிலான நடவடிக்கைகளை இந்திய ரயில்வே பராமரித்தது, IT-செயல்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்ட பரீட்சை செயல்பாட்டில், ஒவ்வொரு வினாத்தாளும் தனி பாணியில் அமைக்கப்பட்டது.

ஆட்சேர்ப்பு இயக்கம் அனைத்து பிராந்தியங்களுக்கும் 21 பிராந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களால் (RRB) ஏற்பாடு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்நத 21 ரயில்வே மண்டலங்கள்: அகமதாபாத், அஜ்மீர், அலகாபாத், பெங்களூர், போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், சென்னை, கோரக்பூர், குவாஹாட்டி, ஜம்மு ஸ்ரீநகர், கொல்கத்தா, மால்டா, மும்பை, முசாபர்பாரு, பட்னபூர், பட்னல் ஆகியன ஆகும்.

குறித்த இந்த RRB ALP 2019-க்கு விண்ணப்பிக்க இந்திய பிரஜைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விண்ணப்பிக்கம் வேட்பாளர்கள் ITI சான்றிதழ் (NCVT / SCVT ஒப்புதல் பெற்றது), அல்லது CSE அல்லது சிவில் துறைகளைத் தவிர டிப்ளோமா இன்ஜினியரிங் உடன் 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். OBC வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வயது தளர்வு வழங்கப்பட்டது, SC / ST வேட்பாளர்களுக்கு 5 வயது உயர் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.