இலங்கையை விட இந்தியாவுக்கு 12 மடங்கு கடன் சுமை. இங்கு நிலைமை ஒருபோதும் மோசமாகாது

India Debt Burden 2022: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. இலங்கை போன்று இங்கு நிலைமை மோசமாகுமா? புள்ளிவிவரம் என்ன சொல்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 11, 2022, 04:05 PM IST
  • இலங்கையின் பணவீக்கம் 55 சதவீதத்தை எட்டியுள்ளது.
  • இலங்கையின் மீது சுமார் 51 பில்லியன் டாலர் கடன் சுமத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் கடன் ஒரு வருடத்தில் 47.1 பில்லியன் டாலர்களால் அதிகரித்துள்ளது.
இலங்கையை விட இந்தியாவுக்கு 12 மடங்கு கடன் சுமை. இங்கு நிலைமை ஒருபோதும் மோசமாகாது title=

புதுடெல்லி: இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எந்த ஆளவுக்கு என்றால், சாவின் விளிம்பில் இலங்கை பொருளாதாரம் உள்ளது. தற்போது இலங்கையின் பணவீக்கம் 55 சதவீதத்தை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரித்து, அதாவது 70 சதவீதத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க சாவின் விளிம்பை நோக்கி இலங்கை பொருளாதாரம் செல்லும். அங்கு உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு இன்று நிலைமை மோசமாகியுள்ளது. வாகனங்களுக்கு டீசல் பெட்ரோல் போட முடியவில்லை. அரிசி கூட வாங்க முடியாத அளவுக்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொது மக்கள் வீதிகளில்  இறங்கி இலங்கை அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு உள்ளனர். இலங்கையில் இருந்து வரும் காட்சிகள், காணொளிகளை பார்க்கும் போது, இலங்கை இன்று எவ்வளவு மோசமான சூழ்நிலையில் சிக்கியிருக்கிறது என்று யூகிக்க முடியும். இலங்கையின் மீது சுமார் 51 பில்லியன் டாலர் கடன் சுமத்தப்பட்டுள்ளது. மோசமான நாணய நிர்வாகம் மற்றும் மோசமான முதலீட்டு கொள்கையின் காரணமாக தான் இலங்கை இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட கதி, நமக்கும் ஏற்படலாம் எனவும், இது அனைவருக்குமான பாடம் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை போன்று இந்தியாவிலும் ஏற்படுமா? இலங்கையை விட சுமார் 12 மடங்கு கடன் இந்தியாவின் மேல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியானால் இந்தியாவின் நிலை ஒரு நாள் இலங்கையை போல் ஆகுமா? புள்ளி விவரம் என்ன தான் கூறுகிறது. வாருங்கள் சற்று விரிவாக அறிந்துக்கொள்ளுவோம்.

மார்ச் 2022 வரையிலான இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், இந்தியாவில் சுமார் 620.7 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன் இருப்பது தெரியும். கடந்த ஆண்டு இது 570 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது, இந்தியாவின் கடன் ஒரு வருடத்தில் சுமார் 47.1 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. அதாவது, இலங்கையின் மீது மொத்தக் கடன் எவ்வளவு இருக்கிறதோ, ஏறக்குறைய அந்த அளவு இந்தியாவின் மீது ஒரு வருடத்தில் கடன் சுமை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: கொந்தளிப்பில் இலங்கை; அடுத்தது சீனாவில் வலையில் சிக்கிய பாகிஸ்தான்?

சற்று பின்னோக்கி பழைய புள்ளி விவரங்களைப் பார்த்தால், மார்ச் 2018 இல் 529.7 பில்லியன் டாலராக இருந்தது. இது மார்ச் 2019 இல் 543 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மார்ச் 2020 வரை இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 558.5 பில்லியன் டாலர்களை எட்டியது. அப்படியானால் ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரித்து வருவதால், கடன் சுமை என்ற புதைகுழியில் நாம் மூழ்கிவிட்டோமா? இந்தியாவின் நிலையும் இலங்கை போல் ஆகப் போகிறதா? என்ற அச்சம் அனைவரின் மனதில் எழுவது இயல்பு தான். 

india will not become like srilanka
Sri Lanka Protest (Photo: Reuters) 

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் கடன் ஒரு வருடத்தில் 47.1 பில்லியன் டாலர்களால் அதிகரித்துள்ளது. இதைப் பார்க்கும்போது, ​​இந்தியாவின் நிலை மோசமாகிக்கொண்டிருப்பதாக நீங்கள் உணரலாம், ஆனால் உண்மை முற்றிலும் வேறுபட்டது.

2020 மார்ச்சில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 20.6 சதவீதமாக இருந்தது. இது மார்ச் 2021ல் 21.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், மார்ச் 2022 நிலவரப்படி, இந்த விகிதம் 19.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடன் $47.1 பில்லியன் அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட கடன் விகிதம் குறைவாக இருந்தால், கடனை திருப்பிச் செலுத்த ஒரு நாடு அதிக திறன் கொண்டதாக இருக்கும் என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். இந்த விகிதாச்சாரம் இலங்கை மிகவும் அதிகரித்திருந்தது. இதன் காரணமாக வாங்கிய கடனை இலங்கையால் செலுத்த முடியவில்லை.

மேலும் படிக்க: இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா!

இலங்கை நீண்ட காலமாக கடன் வலையில் சிக்கித் தவித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில், இலங்கையின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்துடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகரித்து இருந்தது. அது 2018 ஆம் ஆண்டிலேயே, 91 சதவீதமாக உயர்ந்தது. அதுவே 2021ல் 119 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலக வங்கியின் ஆய்வின்படி, இலங்கை போன்ற வளரும் நாடுகளுக்கான கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சுமார் 65 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. இதற்கு மேல் அதிகரித்தால், ஒவ்வொரு புள்ளி அதிகரிப்பும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதகமான விளைவை ஏற்படுத்தும் எனக் கணித்துள்ளனர்.

Sri Lanka Crisis
Sri Lanka Crisis (Photo: Reuters)

இதுவே இந்தியாவுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் கடன் சுமை 620 பில்லியன் டாலர் ஆகும். கடன் - ஜிடிபி விகிதம் 19.9 சதவீதம். அதாவது, இந்தியா சிறப்பான நிலையில் உள்ளது. இலங்கை போன்ற நிலைமைகள் இந்தியாவுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன.

மேலும் படிக்க: இலங்கை நெருக்கடி; மணல் திட்டிற்கு வந்த ஈழத்தமிழர்களை மீட்ட கடலோர காவல் படை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News