பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவரது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகளான ஷீனா போரா, பீட்டர் முகர்ஜியின் மகனை காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணி முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்தும், ஷீனா போரா தனது காதலைக் கைவிட மறுத்ததால், ஷீனா போராவை இந்திராணி முகர்ஜி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | CUET PG 2022: முதுநிலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு பதிவு தொடங்கியது
2012-ம் ஆண்டு கொலை நடைபெற்ற நிலையில், இந்திராணி முகர்ஜியின் ஓட்டுநர் 2015-ம் ஆண்டு வேறொரு வழக்கில் கைதானபோதே இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. பின்னர் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி மும்பை பைக்குல்லா சிறையில் அடைக்கப்பட்டார். இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்க கீழமை நீதிமன்றம் மறுத்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. பீட்டர் முகர்ஜி ஏற்கனவே ஜாமீனில் இருப்பதாலும், இந்திராணி முகர்ஜி ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்ததாலும், வழக்கு விசாரணை இப்போதைக்கு முடிய வாய்ப்பு இல்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்திராணி முகர்ஜி சிறையில் இருந்து இன்று விடுதலை ஆனார்.
மேலும் படிக்க | பெகாசஸ் உளவு விவகாரம்...விசாரணைக்குழுவுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR