துல்லியத் தாக்குதல் தின கொண்டாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து பல்கலை கழகங்களுக்கும் UGC சுற்றரிக்கை அனுப்பியுள்ளது!
துல்லியத் தாக்குதல் என்பது ராணுவத்தின் தாக்குதல் முறைகளில் ஒன்றாகும். சரியான இராணுவ இலக்கிற்கு மட்டுமே சேதம் விளைவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ரகசிய தாக்குதல் முறை ஆகும்.
2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் நாள் இந்திய ராணும் இந்த துல்லியத் தாக்குதல் முறையினை 7 பயங்கரவாத அமைப்புகளின் மீது செயல்படுத்தி எல்லையினை மீட்டெடுத்தனர். அந்த வகையில் செப்டம்பர் 29-ஆம் நாள் துல்லியத் தாக்குதல் தினமாக கொண்டாடப்படுகின்றது.
University Grants Commission (UGC) issues circular to vice chancellors of all universities, provides list of activities which maybe undertaken on 29th September following Govt of India's decision to celebrate it as 'Surgical Strike Day'. pic.twitter.com/eJ3PxCRdFY
— ANI (@ANI) September 21, 2018
இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இந்த துல்லியத் தாக்குதல் தினத்தை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி துல்லியத் தாக்குதல் தின கொண்டாட்டம் குறித்த அறிக்கையினை பல்கலை கழுக துணை வேந்தர்கள் சமர்பிக்க வேண்டுமாய் UGC அறிவித்துள்ளது.
ஆனால் இந்த தினத்தினை மேற்கு வங்க கல்வி நிலையங்களில் கொண்டாட முடியாது என கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜி எதிர்ப்பு கொடி காண்பித்துள்ளார். துல்லியத் தாக்குதல் என்பது பாஜக-வின் நிரல்களில் ஒன்றாகும். இராணுவ கொள்கைகளை பாஜக கல்வி நிலையங்களில் புகுத்த முயல்கின்றது. எனவே துல்லியத்தினத்தினை மேற்கு வங்க கல்வி நிலையங்களில் கொண்டாடப்படாது என தெரிவித்துள்ளார்!