சபரிமலை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது என்று கூறியுள்ளார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரு பெண் பக்தரும் சாமி தரிசனம் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்ட நிலையில் நேற்று அதன் நடை சாத்தப்பட்டு விட்டது.
அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. குண்டூரைச் சேர்ந்த பத்து பெண் பக்தர்கள் குழுவாக மலையேற முயற்சித்தபோது வன்முறையாளர்களால் சூழப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்டனர்.
இதனிடையே, சபரிமலை விவகாரத்தில் உட்ச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13 ஆம் தேதி மாலை 3 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்நிலையில், சபரிமலை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கருத்து கூறியுள்ளார்.
இவரது கருத்துக்கு பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இது குறித்து பேசுகையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து என்னால் எந்த வித கருத்தும் கூற முடியாது. அதே நேரத்தில் வழிபடுவதற்கான உரிமை எனக்கு உள்ளது. வழிபடுவதை அவமதிக்கும் உரிமை எனக்கு இல்லை.
அதுமட்டும் இல்லை, ஒரு அடிப்படை அறிவுடன் சபரிமலை விவகாரத்தைப் பாருங்கள். உங்களுக்கு மாதவிடாயின் போது ரத்தம் வடியும் சானிட்டரி நாப்கினுடன் உங்கள் நண்பர் வீட்டிற்குச் செல்வீர்களா?.... போகமாட்டீர்கள் அல்லவா?. பிறகு ஏன் அதை கடவுள் இருக்கும் இடத்துக்கு இல்லத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள்?'. எனக்கு தரிசனம் செய்யும் உரிமையுள்ளது, ஆனால் புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது. இதுதான் வித்தியாசம், இதனை புரிந்துக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சபரிமலை குறித்த மத்திய அமைச்சர் இராணியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.
A.Some senior citizens & most babies wear diapers inside temples. B. Women wearing sanitary pads are exactly as hygienic as women who are not menstruating. C. You are not desecrating a temple by carrying your excreta in your colon inside it. Stop shaming menstruation! #Sabarimala https://t.co/smKVCHrc8F
— Siddharth (@Actor_Siddharth) October 23, 2018
இதை தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு கோயில் நடை பூஜைகளுக்குப் பின் மூடப்பட்டது. 6 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நடை சாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது...!