சுமார் ஆறுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று மனைவி சாராவுடன் ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹாலை கண்டு களித்தார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரியா வந்தடைந்த பெஞ்சமின் நேதன்யாகு தம்பதியருக்கு உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து அமர் விலாஸ் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் பெஞ்சமின் நேதன்யாகு தனது மனைவி சாராவுடன் பேட்டரி காரில் சென்று தாஜ் மஹாலை சுற்றிப் பார்த்தார்.
அவரது வருகைக்காக இதர சுற்றுலா பயணிகள் சுமார் இரண்டு மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். தாஜ் மஹாலை சுற்றிப்பார்த்த பின்னர் பெஞ்சமின் நேதன்யாகு தம்பதியர் மற்றும் அவர்களுடன் வந்துள்ள இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் குழுவுக்கு யோகி ஆதித்யாநாத் மதிய விருந்து அளித்தார்.