மத்திய அரசு அறிமுகப்படுத்திய விண்வெளி துறை சீர்திருத்தங்கள் இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு சிறந்த கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான ISRO தலைவர் கே.சிவன் கூறினார்.
புதுடெல்லி: இஸ்ரோ (ISRO) தலைவர் கே.சிவன் (K.Sivan) வியாழக்கிழமை, விண்வெளித்துறையில் மத்திய அரசு கொண்டுவதுள்ள சீர்திருத்தங்கள் சிறந்த மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறியதோடு, இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என்று உறுதி படக் கூறினார்.
வெபினார் ஒன்றில் உரையாற்றிய சிவன், விண்வெளித்துறையை தனியார் மயமாக்கும் நோக்கில், சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
There have been many misconceptions like privatisation of ISRO. I want to state that there is no privatisation of ISRO. In fact, the whole mechanism is enabling private people to carry out space activities, which otherwise are done by ISRO: K Sivan, ISRO Chief https://t.co/dIDCDUrknU pic.twitter.com/JrTUQvyqmx
— ANI (@ANI) August 20, 2020
"விண்வெளித் துறையில் மேற்கொள்ள உள்ள சீர்திருத்தங்கள் குறித்த அரசு அறிவிப்பு வெளியான போது, இது இஸ்ரோவை தனியார்மயமாக்க வழிவகுக்கும் என்பது போன்ற பல தவறான கருத்துக்கள் கூறப்பட்டன. இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என்பதை நான் மீண்டும் உறுபடுத்துகிறேன், ”என்று சிவன் கூறினார்.
முன்மொழியப்பட்ட விண்வெளி நடவடிக்கை வரைவு மசோதா கிட்டத்தட்ட இறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் அது விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
‘விண்வெளித் துறையில் இந்தியாவின் திறனை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு வெபினாரில் உரையாற்றிய அவர், இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் தனியார் துறையினருக்கும் விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதாகும் என்றார்.
ALSO READ | ஸ்ரீராமர் கோயில் காலம் கடந்து நிற்க நுட்பத்தை சொல்கிறது சென்னை IIT...!!!
மத்திய அரசு அறிமுகப்படுத்திய விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் இந்தியாவின் விண்வெளித் துறையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
" இஸ்ரோ முன்பை விட மேலும் தீவிரமாக பணியாற்ற உள்ளது. உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் கூடவே,அரசின் வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இஸ்ரோ தனது திறமைகளை சிறப்பாகப் பயன்படுத்த இது வழி வகுக்கும்," என்று அவர் கூறினார்.
கிரகங்கள் தொடர்பான ஆய்வு பணிகள் உட்பட, விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் துறையின் பங்களிப்பிற்கு, மத்திய அரசு ஜூன் 24 அன்று ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | தூய்மையான நகரங்களின் பட்டியலில் 4-வது முறையாக முதலிடம் பிடித்த இந்தூர்!!