பிரபல இந்திய நடிகை ஜெயபிரதா இன்று பாரத்திய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது; மேலும் வரும் மக்களவை தேர்தலில் ராம்பூர் தொகுதியில் இருந்து அவர் போட்டியிடுவார் எனவும் தெரிகிறது.
தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் நடித்த பிரபல நடிகை ஜெயபிரதா இன்று பாஜக-வின் தன்னை இணைத்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மக்களவை தேர்தலுக்கு மிக குறைவான நாட்களே உள்ள நிலையில், வரும் தேர்தலில் ஜெயபிரதா போட்டியிட்டால் அவருக்கு உத்திர பிரதேச மாநிலத்தின் ராம்பூர் தொகுதி அளிக்கப்படும் என தெரிகிறது.
ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சின் நம்பிக்கைகுறிய வேட்பாளர் அஜாம் கான் களம் காணுகின்றார். அவரை எதிர்த்து போட்டியிட பலம் வாய்ந்த வேட்பாளரை பாஜக தேடி வருகின்றது. இந்நிலையில் தற்போது இந்த இடத்தில் ஜெயபிரதா போட்டியிடலாம் என தெரிகிறது.
ராம்பூர் தொகுதியில் களம்காணும் ஜெயபிரதா மற்றும் அஜாம் கான் ஆகிய இருவரும் கடந்த 2009-ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இருந்த போது மக்களிடையே நிகரான செல்வாக்கு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராம்பூரில் பாஜக வேட்பாளர் நேபால் சிங் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜெயபிரதா தனது அரசியல் வாழ்வில் பல அரசியல் கட்சிகளில் பயணித்துள்ளார். தெலுங்கு தேச கட்சியில் தனது அரசியல் வாழ்வை தொடர்ந்த இவர், பின்னர் அக்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் அவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியில் விலகினார். பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 2004 மற்றும் 2009 மக்களவை தேர்தலில் ராம்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2010-ஆம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறினார்.
பின்னர் அமர் சிங்குடன் இணைந்து ராஷ்டீரிய லோக் மன்ச் கட்சியில் தனது பயணத்தை தொடர்ந்தார். எனினும் அப்போதைய காலகட்டத்தில் ராஷ்டீரிய லோக் மன்ச் கட்சிக்கு உத்திரபிரதேசத்தில் செல்வாக்கு இல்லை என்பதால் ஜெயபிரதாவால் அரசியலில் சோபிக்க முடியவில்லை. அதன் விலைவாக கடந்த 2014-ஆம் ஆண்டு 2014-ஆம் பிஜினூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயபிரதா தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தற்போது ஜெயபிரதா பாஜக-வுடன் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிகிறது.