எதிர்வரும் ஜூன் 19 மாநிலங்களவை தேர்தலில், கர்நாடகாவிலிருந்து பாரதீய ஜனதா தனது வேட்பாளர்களாக எரன்னா கடாடி மற்றும் அசோக் காஸ்தி களமிறங்கவுள்ளனர். இந்நிலையில் JD(S) தரப்பில் இருந்து முன்னாள் பிரதமர் HD தேவேகவுடாவை களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், RSS பின்னணியில் இருந்து வந்ததாகக் கூறப்படும் கடாடி மற்றும் காஸ்தியை பரிந்துரைக்க மாநில அலகு அளித்த பரிந்துரைகளை பாஜக புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை -தேவேகவுடா!...
ஜூன் 25-ஆம் தேதி காலியாகவிருக்கும்(கர்நாடகாவிலிருந்து) நான்கு மாநிலங்களவை இடங்களை நிரப்ப ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அந்த இடங்களை ராஜீவ் கவுடா மற்றும் காங்கிரசின் பி.கே.ஹரிபிரசாத், பாஜகவின் பிரபாகர் கோரே மற்றும் JD(S) டி குபேந்திர ரெட்டி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இதனிடையே மல்லிகார்ஜுன் கார்கேவின் பெயரை ஒரு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதுதொடர்பான அறிவிப்பில் ‘கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவரை சோனியா காந்தி மற்றும் பல தேசிய தலைவர்களின் வேண்டுகோளின் பேரில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் HD தேவேகவுடா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை உறுதி செய்யும் விதமாக அனைவரின் ஒருமித்த கருத்தை ஒப்புக் கொண்டதற்கு ஸ்ரீ தேவேகவுடாவுக்கு நன்றி, என குமாரசாமி ட்வீட் செய்துள்ளார்.
தும்கூர் தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் பிரதமர்...
மேலும் அவர் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியான ஜூன் 9 அன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபையில் 34 இடங்களைக் கொண்ட JD(S), மாநிலங்களவையில் ஒரு இடத்தை சொந்தமாக வெல்லும் நிலையில் இல்லை, மாறாக காங்கிரஸின் உபரி வாக்கு ஆதரவுடன் மாநிலங்களவையில் இடத்தை வெல்லும் நிலையில் உள்ளது. ஏனெனில் மாநிலங்களவையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற குறைந்தபட்சம் 45 வாக்குகள் பெறவேண்டும்.