370 வது பிரிவு ரத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஃபாரூக் அப்துல்லாவின் மகள், சகோதரி ஜாமீனில் விடுவிப்பு!!
கடந்த ஆகஸ்ட் 05 ஆம் தேதி அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் மேற்கொள்வதற்கு முன்பே, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இன்டர்நெட் மற்றும் தகவல் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.
மேலும், முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், ஏறக்குறைய 2 மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்தவர்களை படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
Jammu & Kashmir: National Conference (NC) President Farooq Abdullah's sister Suraiya and daughter Safiya were released on bail last night. They were detained on Tuesday during a protest against abrogation of #Article370 in Srinagar. (file pics) pic.twitter.com/ElmYSCbP3o
— ANI (@ANI) October 17, 2019
இந்நிலையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 15 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்பின், நேற்றிரவு (அக்.16) அவர்களை போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர். அவர்கள் ரூ.50 ஆயிரம் ரொக்க ஜாமீனிலும், அமைதியை சீர்குலைக்கும் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என உத்தரவாதம் அளித்தும் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.