Job Alert! 10 ஆயிரம் பேருக்கு வேலை ரெடி! ஆளெடுக்கும் Ola

ஓலா நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு.. 10 ஆயிரம் வேலைகள் ரெடி... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 22, 2021, 11:23 AM IST
Job Alert! 10 ஆயிரம் பேருக்கு வேலை ரெடி! ஆளெடுக்கும் Ola title=

Ola Cars Job Alert: ஓலா 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. எனவே, வேலை தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஓலா நிறுவனம் (mobility platform Ola) அறிவித்துள்ளது.

முன்னதாக, பன்னாட்டு ரைடு ஷேரிங் நிறுவனமான ஓலா, 'ஓலா கார்ஸ்' எனப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனைத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வீட்டில் இருந்தபடியே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க முடியும். மேலும், இதன் மூலம், மாதாந்திர தவணை வசதிகளும், ஒரு வருட உத்தரவாதமும் கிடைக்கும்.

ஓலா கார்ஸ் தளத்தின் மூலம், பயனர்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை (Second Hand Cars) எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும். செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதிலும் விற்பதிலும் அதிகமான ஆர்வமும் தேவையும் இருக்கும் இந்த நேரத்தில் ஓலா இந்த தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

Also Read | குறைந்த விலையில் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்க ஓலாவின் புதிய தளம் அறிமுகம்

பயன்படுத்தப்பட்ட கார்களை மறுவிற்பனை செய்யும் CarDekho, Cars24, CarTrade, Droom மற்றும் Spinny போன்ற தளங்கள் ஏற்கனவே களத்தில் உள்ளன. அந்த நிறுவனங்களுடன் ஓலா கார்ஸ் தளமும் போட்டி போடுகிறது.  

எனவே, 10,000 பேரை வேலைக்கு அமர்த்த ஓலா திட்டமிட்டுள்ளது. இது ஓலாவுடன் இணைந்து பணியாற்ற இது சிறந்த வாய்ப்பாக இருக்கும். அடுத்த 12 மாதங்களில் ஓலா கோர்ஸின் வாகன வர்த்தக தளம், 2 பில்லியன் மொத்த வர்த்தக மதிப்பு (gross merchandise value (GMV)) செய்ய திட்டமிட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 மாதங்களில் ஓலா கார்கள் 30 நகரங்களில் செயல்படும் என்றும் அடுத்த ஒரு வருடத்தில் மேலும் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 5,000 பயன்படுத்திய கார்களை விற்றுள்ளதாக ஓலா கார் நிறுவனம் கூறியுள்ளது.

Also Read | 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு எடுத்தால் நடவடிக்கை!

"வரும் மாதங்களில் ஓலா கார்கள் விற்பனை மற்றும் சேவை மையங்கள் உட்பட முக்கிய துறைகளில் 10,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டிருக்கிறோம்" என்று ஓலா கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் தேஷ்முக் கூறுகிறார்.

டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் ஓலா, வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வார இறுதிக்குள், விற்பனை செய்யும் பணி, சண்டிகர், ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் இந்தூர் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ஓலா தனது OLA கார்களுக்கான சேவை மையங்களை நாடு முழுவதும் அமைக்கிறது. அதன் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விரிவாகக் கூறும் ஓலா, தாந்து OLA Cars மூலம் மற்ற வாகன பிராண்டுகளின் புதிய வாகனங்களையும் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளது.

Also Read | இந்திய ரயில்வே 4000+ பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News