Ola Cars: பன்னாட்டு ரைடு ஷேரிங் நிறுவனமான ஓலா, 'ஓலா கார்ஸ்' எனப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனைத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வீட்டில் இருந்தபடியே பயன்படுத்தப்பட்ட கார்களை சோதித்து வாங்க முடியும். மேலும், இதன் மூலம், ஈஎம்ஐ வசதிகளும், ஒரு வருட உத்தரவாத வசதியும் கிடைக்கும்.
ஓலா கார்ஸ் தளத்தின் மூலம், பயனர்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை (Second Hand Cars) எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும். செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதிலும் விற்பதிலும் அதிகமான ஆர்வமும் தேவையும் இருக்கும் இந்த நேரத்தில் ஓலா இந்த தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆராய்ச்சி நிறுவனமான பி & எஸ் இன்டலிஜென்ஸ் நடத்திய ஆய்வில், நாட்டின் உபயோகப்படுத்தப்பட்ட கார் சந்தையின் மதிப்பு 2030 ஆம் ஆண்டில் 70.8 பில்லியன் டாலராக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இது 18.3 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலா கார்ஸ் தளம், CarDekho, Cars24, CarTrade, Droom மற்றும் Spinny போன்ற தளங்களுடன் போட்டியில் இறங்கும். இந்த நிறுவனனங்கள், செகண்ட் ஹேண்ட் கார் விற்பனைத் துறையில் கடந்த சில காலமாக தங்கள் இருப்பை நிலைநாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Ola Electric Scooter: புக் செய்யும் முன் இவற்றை கண்டிப்பாக செக் செய்து கொள்ளுங்கள்
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், சமீபத்தில் S1 மற்றும் S1 Pro ஆகிய இரு வகைகளில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ .99,999 மற்றும் ரூ .1,29,999 ஆகும்.
இதற்கிடையில், ஓலா நிறுவனம், 500 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் ஒரு தொழிற்சாலையை அமைத்து, அங்கு ஆண்டுதோறும் ஒரு கோடி வாகனங்களை உருவாக்க முடிவெடுத்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தொழிற்சாலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
12-14 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், குறைந்தபட்சம் 1.5-2 பில்லியன் டாலரை திரட்டும் நோக்கத்துடன், ஓலா 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பங்குச்சந்தையில் நுழையவும் திட்டமிட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பாவிஷ் அகர்வாலுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் மூலதனத்தின் பாதியை முதன்மை வெளியீட்டின் (Primary Issue) மூலமும், மீதமுள்ளவற்றை சில ஆரம்பகால ஆதரவாளர்கள் மூலம் ஆஃபர் ஃபார் சேல் (OFS) மூலமும் திரட்டும்.
சிட்டிக்ரூப், கோடக் மஹிந்திரா மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற வங்கிகள் ஓலா நிறுவனத்தின் ஆரம்ப பொது வழங்கலை (IPO) நிர்வகிக்க உதவும்.
Ola அடுத்த அதிரடி: விரைவில் வருகிறது ஓலா மின்சார கார், விவரம் இதோ!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR