புதுடெல்லி: தனக்கும் & டிரம்ப்க்கும் இடையேயான சந்திப்பில் என்னென்ன நடந்தது என்பதை பிரதமர் மோடி தேசத்திடம் சொல்ல வேண்டும் என ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
மூன்றுநாள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப், " காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும்படியும், உதவ முன்வருமாறு பிரதமர் மோடி தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும், தேவைப்பட்டால் இந்தியா - பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு நடத்த தாம் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதாகவும் டிரம்ப் கூறினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபர் தலையீட்டை இந்தியா கொள்கையளவில் விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை அரசு மாற்றிக் கொண்டதா? என மத்திய அரசிடம் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது. மேலும் இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்பின் யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது. பிரதமர் மோடி உதவும்படி கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறியதையும் இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தநிலையில், முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது உண்மையானால், பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என அர்த்தம் என்று ராகுல் கூறியுள்ளார்.
President Trump says PM Modi asked him to mediate between India & Pakistan on Kashmir!
If true, PM Modi has betrayed India’s interests & 1972 Shimla Agreement.
A weak Foreign Ministry denial won’t do. PM must tell the nation what transpired in the meeting between him & @POTUS
— Rahul Gandhi (@RahulGandhi) July 23, 2019
அவர் ட்விட்டரில் கூறியது,
"காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
இது உண்மை என்றால், 1972 சிம்லா ஒப்பந்தப்படி பிரதமர் மோடி நடந்துக்கொள்ள வில்லை. பிரதமர் மோடி இந்தியாவின் நலனில் அக்கறை இல்லை என்றும், அவர் மக்களை ஏமாற்றி உள்ளார்.
பலவீனமான வெளியுறவு அமைச்சகம் இதை மறுக்கிறது. தனக்கும் & டிரம்ப்க்கும் இடையேயான சந்திப்பில் என்னென்ன நடந்தது என்பதை பிரதமர் மோடி தேசத்திடம் சொல்ல வேண்டும்"
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.