அதி வேகத்தில் நேரெதிர் பயணிக்கும் இரு ரயில்கள்; ஒன்றில் ரயில்வே அமைச்சர் பயணம்!

இந்திய ரயில்வேக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. அப்போது, அதில் ஒன்றில் ​​ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்வார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2022, 12:29 PM IST
  • ரயில்வே பாதுகாப்பு தொழில்நுட்ப கவசம் (Kavach) சோதனை செய்யப்படும்.
  • இரண்டு ரயில்கள் முழு வேகத்தில் மோதிக்கொள்ளும்.
  • ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு ரயிலில் பயணம் செய்வார்.
அதி வேகத்தில் நேரெதிர் பயணிக்கும் இரு ரயில்கள்; ஒன்றில் ரயில்வே அமைச்சர் பயணம்! title=

இந்திய ரயில்வே தனது சேவைகளையும் தொழில்நுட்பத்தையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இன்று ரயில்வேக்கு மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். இன்று ரயில்வே இரண்டு ரயில்களின் முழு வேகத்தில் மோதிக் கொள்ளும். அப்போது, அதில் ஒன்றில் ​​ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்வார். மற்றொன்றில், ரயில்வே வாரியத் தலைவர் பயணம் செய்வார்.

உள்நாட்டு தொழில்நுட்ப கவசம் (Kavachசோதனை செய்யப்படும்

ரயில்வே இன்று உள்நாட்டு ரயில் மோதல் பாதுகாப்பு தொழில்நுட்பமான 'கவாச்' என்னும் நுட்பத்தை சோதனை செய்யவுள்ளது. இந்த சோதனை செகந்திராபாத்தில் நடைபெறும். இதில், இரண்டு ரயில்கள் முழு வேகத்தில் எதிரெதிர் திசையில் இருந்து ஒன்றையொன்று நோக்கிச் செல்லும். ஆனால், 'கவசம்' காரணமாக, இந்த இரண்டு ரயில்களும் மோதிக் கொள்வது தவிர்க்கப்படும். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சனத்நகர்-சங்கர்பள்ளி வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செகந்திராபாத் சென்றடைகிறார்.

மேலும் படிக்க | Indian Railways: உங்கள் ரயில் டிக்கெட்டில் 'வேறு ஒருவரும்' பயணிக்கலாம்!

பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் 

ரயில்வே அமைச்சகம் பல வருட ஆராய்ச்சிக்கு பிறகு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்ட இந்த கவச் (Kavach) தொழில்நுட்பம் உலகின் மலிவான தானியங்கி ரயில் மோதல் பாதுகாப்பு அமைப்பாக நம்பப்படுகிறது. இந்த தொழில்நுட்பம், 'ஜீரோ ஆக்சிடென்ட்' என்ற இலக்கை அடைய ரயில்வேக்கு உதவும். சிவப்பு சிக்னலைத் தாண்டியவுடன் ரயில் தானாகவே பிரேக் போடும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து ரயில்களும் நின்று செல்லும். இது தவிர பின்னால் வரும் ரயிலையும் கவசம் பாதுகாக்கும்.

அமைப்பு  வேலை செய்யும் முறை

டிரைவர் ஏதேனும் தவறிழைத்தால் கவாச் ஆடியோ-வீடியோ மூலம் முதலில் எச்சரிக்கும். பதில் வரவில்லை என்றால், ரயிலில் தானியங்கி பிரேக் போடப்படும். இதனுடன், இந்த அமைப்பு ரயிலை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வேகமாக இயக்க அனுமதிக்காது. கவச் திழில்நுட்பத்தில் உள்ள RFID சாதனங்கள் ரயில் என்ஜின், சிக்னல் அமைப்பு, ரயில் நிலையம் ஆகியவற்றிற்குள் நிறுவப்படும். கவாச் தொழில்நுட்பம் ஜிபிஎஸ், ரேடியோ அலைவரிசை போன்ற அமைப்புகளில் வேலை செய்யும்.

மேலும் படிக்க | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News