எஸ்பிஐ வங்கியை பின்னுக்கு தள்ளிய கோடக் மகிந்தரா!

கோடக் மகிந்தரா வங்கி மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியாகும். அதிக சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில் (எஸ்பிஐ) பாரத ஸ்டேட் வங்கியை பின்னுக்கு தள்ளி கோடக் மகிந்தரா வங்கி 2வது இடத்தை பிடித்துள்ளது.

Last Updated : Apr 17, 2018, 04:05 PM IST
எஸ்பிஐ வங்கியை பின்னுக்கு தள்ளிய கோடக் மகிந்தரா! title=

கோடக் மகிந்தரா வங்கி மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியாகும். அதிக சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில் (எஸ்பிஐ) பாரத ஸ்டேட் வங்கியை பின்னுக்கு தள்ளி கோடக் மகிந்தரா வங்கி 2வது இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி தற்போது இந்தியாவின் மதிப்பு வங்கிகள் பட்டியலில் முதல் இடத்தினை எச்டிஎப்சி (HDFC) வங்கி பிடித்துள்ளது. மேலும் மூன்றாம் இடத்தினை பாரத ஸ்டேட் வங்கி பிடித்துள்ளது.

கோடக் மகிந்தரா வங்கியின் பங்கு சந்தை மதிப்பு ரூ.2,22,560 கோடியாக உயர்ந்ததுள்ளது. இதன்மூலம் அதிக பங்கு சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில் கோடக் மகிந்தரா வங்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம் (எஸ்பிஐ) பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு சந்தை மதிப்பு ரூ.2,22,043 கோடியாக உள்ளது. இதன்மூலம் (எஸ்பிஐ) பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு சந்தை மதிப்பு 1 சதவீதம் உயர்ந்தது.

அதிக பங்கு சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில் எச்டிஎப்சி (HDFC) வங்கி முதலிடத்தில் உள்ளது. இந்த வங்கியின் பங்கு சந்தை மதிப்பு ரூ.,5,04,000 கோடியாக உள்ளது.

Trending News