நீதிமன்றத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தை! போராடி பிடித்த வனத்துறையினர்!

நீதிமன்றத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தையை, நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காசியாபாத் மாவட்ட  வனத்துறை அதிகாரிகள் அதனை பிடித்தனர்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 10, 2023, 02:53 PM IST
நீதிமன்றத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தை! போராடி பிடித்த வனத்துறையினர்! title=

தலைநகர் புது தில்லிக்கு அருகிலுள்ள காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்ததில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். வனத்துறை அதிகாரிகள் நான்கு மணி நேரம் போராடி, சிறுத்தையை பிடித்தனர்.  காசியாபாத் மாவட்ட நீதிமன்ற கட்டிட வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சிறுத்தை நுழைந்ததாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தின் பரபரப்பான நடைபாதையில்  சிறுத்தை நடந்து செல்வதை பார்த்த மக்கள, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

விலங்கின் தாக்குதலால் காயங்களுக்கு உள்ளான மூன்று சகோதரர்கள், தாங்கள் இரண்டாவது மாடியில் இருந்தபோது சிறுத்தை தமக்கு முன்னால் நிற்பதைக் கண்டதாகக் கூறி, அந்த பயங்கரமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் இது குறித்து கூறுகையில், “நாங்கள் அதிர்ந்து போனோம். அது எங்கள் மூவரையும் தாக்கிவிட்டு சிறுத்தை கீழே ஓடியது,” என்று காயமடைந்த தன்வீர் அகமது கூறினார். அமைதி துப்பாக்கியால் சுட்டு சிறுத்தையை வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | Thirsty Snake: தண்ணி போடும் பாம்பு! தீராத தாகத்தை தணிக்கும் பாம்பு வீடியோ வைரல்

வனத்துறை அதிகாரிகள் போராடி அதனை பிடித்த நிலையில், கால்நடை மருத்துவர்கள், அதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் மல்டி வைட்டமின்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறுத்தைக்கு பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

காஜியாபாத் பார் அசோசியேஷன் செயலாளர் நிதின் யாதவ் கூறியதா போது, சிறுத்தை லிப்ட் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கிருந்த சிலரை சிறுத்தை தாக்கியது. "மூன்றாவது தளத்தில் இரண்டு வழக்கறிஞர்களை தாக்கிய பிறகு, சிறுத்தை கீழ் தளத்திற்கு குதித்து மேலும் சிலரை தாக்கியது," என்று வழக்கறிஞர் விக்ராந்த் சர்மா கூறினார்.

“நாங்கள் செய்த முதல் காரியம், தரைத்தளத்தில் உள்ள CJM நீதிமன்றத்தின் மடிக்கக்கூடிய வாயிலை மூடுவதுதான். சிறுத்தை அனைவரையும் தாக்க தொடங்கியதால், மற்றொரு படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் மக்கள், தளபாடங்கள் மற்றும் வலையை வைத்து முதல் தளத்தில் இருந்து தப்பிக்கும் வழியைத் தடுத்தனர், ”என்று வளாகத்தில் இருந்த வழக்கறிஞர் விக்ராந்த் சர்மா மேலும் கூறினார்.காசியாபாத் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 52 நீதிமன்ற அறைகள் உள்ளன, தினமும் சுமார் 10,000 பேர் நீதிமன்றத்திற்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | த்ரில் வேட்டை.. பதுங்கி பதுங்கி மானின் மீது பாய்ந்த சிறுத்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News