ஜனநாயக கடமை ஆற்றிய உலகின் குள்ளமான பெண் ஜோதி அம்கே இன்று நாக்பூர் தொகுதியில் வாக்களித்தார்!!
இந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரேதசங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கே தனது பெற்றோருடன் காலையில் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். 25 வயதான ஜோதி அம்கே, தனது பெற்றோர், குடும்ப உறுப்பினர்களுடன் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரை புகைப்படம் எடுக்க முயன்றபோது உற்சாகத்துடன் கையசைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், அனைத்து மக்களும் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். முதலில் வாக்களித்துவிட்டு அதன்பின் உங்களின் மற்ற பணிகளை கவனிக்கலாம் எனத் தெரிவித்தார். உலகிலேயே மிகவும் குள்ளமான பெண், நடிகை மற்றும் கின்னஸ் சாதனையாளரான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கே. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர். இவரின் உயரம் 63 செ.மீ தான். அதாவது, 2 அடி ஒரு இஞ்ச் உயரம் கொண்ட ஜோதி அம்கே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
Maharashtra: World's smallest living woman, Jyoti Amge, casts her vote at a polling station in Nagpur. #IndiaElections2019 pic.twitter.com/QsLiaHMGMx
— ANI (@ANI) April 11, 2019
இவர் பல்வேறு திரைப்படங்கள், அமெரிக்க, இத்தாலி தொலைக்காட்சி நாடகங்களில் ஜோதி அம்கே நடித்துள்ளார். புனேயில் உள்ள லோனாவாலா பகுதியில் புகழ்பெற்றவர்களுக்காக வைக்கப்பட்ட மெழுகுச் சிலையில், ஜோதிக்காகவும் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.