LPG gas cylinder விலை மீண்டும் அதிகரித்தது, எவ்வளவு தெரியுமா?

7.3 மில்லியன் LPG வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் (LPG gas cylinders) விலை மீண்டும் உயர்ந்தன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2020, 06:53 PM IST
  • சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்வு
  • சென்னையில் சிலிண்டரின் விலை ரூ .660
  • வழக்கமாக எல்.பி.ஜியின் விலை மாதத்தின் முதல் வாரத்தில் உயர்த்தப்படும்
LPG gas cylinder விலை மீண்டும் அதிகரித்தது, எவ்வளவு தெரியுமா? title=

புது டெல்லி: நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 14.2 கிலோ மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் (LPG gas cylinder) விலை இப்போது சென்னையில் ரூ .660 அக அதிகரித்துள்ளது. டெல்லியில் 644 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் LPG gas cylinder விலை 670.50 ஆகவும், மும்பையில் 644  ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளன. 14.2 கிலோ சிலிண்டர் (LPG gas cylinders) விலை ரூ .50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 5 கிலோ சிலிண்டரின் விலையில் 18 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கிலோ சிலிண்டர் ரூ. 36.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 14.2 கிலோ மானியமில்லாத (LPG Subsidy) எரிவாயு சிலிண்டர் (LPG gas cylinder) விலை இப்போது சென்னையில் ரூ .660 அக அதிகரித்துள்ளது. டெல்லியில் 644 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் LPG gas cylinder விலை 670.50 ஆகவும், மும்பையில் 644  ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

முன்னதாக 2020 டிசம்பர் முதல் நாளன்று, உள்நாட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் (LPG gas cylinders) விலைகளில் ஏற்றம் காணப்பட்டது. 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் (Commercial Gas Cyliner) விலை 55 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஹெச்பிசிஎல் (HPCL), பிபிசிஎல் ( BPCL), ஐஓசி (IOC) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் எதையும் செய்யவில்லை.

Also Read | அடுத்த ஆண்டு முதல் LPG சிலிண்டர் மானியம் கிடைப்பதில் சிக்கல்..!

வழக்கமாக எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் எல்பிஜியின் விலையில் சில மாற்றங்களை செய்கின்றன. ஆனால் இந்த மாதம் டிசம்பர் 1 ம் தேதியன்று விலை அதிகரிப்பு குறித்து குறிப்பிட்ட ஐஓசி (IOC), 14.2 கிலோ சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் அதிகரிப்பு இல்லை என்று கூறியது.

டெல்லியில் சமையல் எரிவாயு உருளையின் விலை தொடர்ந்து ஏழாவது மாதமாக 594 ரூபாயாக இருப்பதாக நிறுவனம் கூறியது.  ஆனால், இன்று  14.2 கிலோ மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ .50 அதிகரித்து ரூ .644  என இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News