புதுடெல்லி: சத்னா மாவட்ட அமர்பட்டன் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கிர்ஹாய் கிராமத்திற்கு அருகே அதிவேகமாக சென்ற பஸ் கவிழ்ந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே நேரத்தில், ஒரு டஜனுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில் ஐந்து பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. பேருந்து கவிழ்ந்ததுக்கு காரணம் மிக வேகம் பஸ்சை ஓட்டுனர் ஓட்டியதால் தான் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அமர்பத்தானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற ஒரு சம்பவம் மொரேனா கிராமத்தில் நேற்று (வியாழக்கிழமை) காலை வேகமாக வந்த ஒரு பஸ் கிராமச்சுவரில் மோதி ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது. அதில் ஏழு பேர் காயமடைந்தனர் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
அமர்பட்டன் நகரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், பஞ்சவதி போக்குவரத்து நிறுவனத்தை சேர்ந்த பஸ் அதிவேகத்தால் கவிழ்ந்தது. இந்த பஸ் ரஸ்நகரில் இருந்து அமர்பத்தான் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த விபத்துக்குப் பிறகு, காயமடைந்தவர்களை உள்ளூர் மக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து பற்றிய தகவல் அறிந்த பிறகு, அமர்பட்டன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்தனர்.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் புதிய மோட்டார் வாகன விதியை அமல்படுத்தினார் என்பதை அனைவருக்கும் தெரியும். சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக மட்டுமே மத்திய அரசு புதிய விதிகளை அமல்படுத்தியிருந்தது. ஆனாலும் சில மாநிலங்களில் இந்த விதி இன்னும் அமல்படுத்தப்பட வில்லை. அதேபோல சில மாநிலங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது. புதிய மோட்டார் வாகன விதி கொண்டுவந்த பிறகும் கூட, வாகன ஓட்டுகள் விதியின் நடைமுறைகளை பின்பற்றாமல் மீறி வருவதால், இதுபோன்ற பல விபத்துக்கள் அரங்கேறி வருகிறது என்பது மிகவும் வேதனைக்குரிய விசியம் ஆகும்.