மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? BJP? Shiv Sena? Congress?

பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான 50-50 சூத்திரத்தில் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. மறுபுறத்தில் சிவசேனா ஆதரவு கோரினால், அதை காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் எனக் கூர்யு`கூறியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 31, 2019, 06:08 PM IST
மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? BJP? Shiv Sena? Congress? title=

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பாதை இதுவரை தெளிவாகவில்லை. முதல்வர் நாற்காலியைப் பிடிக்க பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. சிவசேனா ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டேவு இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியை அடுத்து சிவசேனா தலைவர் மற்றும் அக்கட்சியின் சட்டமன்றக் கட்சித்தலைவர இன்று மாலை 6:30 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான 50-50 சூத்திரத்தில் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. 

இந்தநிலையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், தனது கட்சி காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறியிருப்பது, மகாராஷ்டிரா அரசியலில் மேலும் பரபரப்பை தீவிரப்படுத்தி உள்ளது. 

இதனையடுத்து சிவசேனாவை ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் தல்வாய் ஒரு பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மகாராஷ்டிரா  மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு கோரினால், அதை காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்று ஹுசைன் தல்வாய் கூறியுள்ளார்.

அதே சமயம், சிவசேனாவுடன் மகாராஷ்டிராவில் அரசு அமைக்கும் முயற்சியில் பாஜகவும் பின்வாங்க வில்லை. சிவசேனாவுக்கு துணை முதலமைச்சர், 8 கேபினட் அமைச்சரவை மற்றும் 8 மாநில அமைச்சரை தர பாஜக முன்வந்துள்ளது. எப்படியிருந்தாலும், சிவசேனாவின் இரண்டரை ஆண்டு முதல்வர் பார்முலாவை பின்பற்ற பாஜக தயாராக இல்லை.

அதாவது பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 288 இடங்களில் 162 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. அதேவேளையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 104 இடங்களை பெற்றது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 145 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். ஆனால் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், இன்னும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

Trending News