பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு: நவாப் மாலிக்!

மராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என அமைச்சர் நவாப் மாலிக் அறிவித்துள்ளார்!!

Last Updated : Feb 28, 2020, 04:32 PM IST
பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு: நவாப் மாலிக்! title=

மராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என அமைச்சர் நவாப் மாலிக் அறிவித்துள்ளார்!!

மராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நவாப் மாலிக் வெள்ளிக்கிழமை (பிப்., 28) அன்று தெரிவித்துள்ளார். மேலும், 'அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. கடந்த அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஐகோர்ட்டின் உத்தரவை விரைவில் சட்ட வடிவில் செயல்படுத்த உள்ளோம்' என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சட்டசபையில் அண்மையில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நவாப் மாலிக் கூறுகயில்... "அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. முந்தைய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, ஐகோர்ட்டின் உத்தரவை விரைவில் சட்ட வடிவில் அமல்படுத்துவோம் என்று அறிவித்துள்ளோம்" என அவர் அறிவித்தார். தற்போதைய சட்டசபை கூட்டத் தொடர் முடிவதற்குள் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். முந்தைய பாஜக அரசில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை" என நவாப் மாலிக் தெரிவித்தார்.

மேலும், விரைவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கொண்டுவரும் என தெரிகிறது. மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்கியது முந்தைய பாஜக-சிவசேனா கூட்டணி அரசு. இதில் தலையிட்ட மும்பை உயர்நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொண்ட போதும் அதை 13%ஆக குறைத்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படி, இடஒதுக்கீடு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் 13% இடஒதுக்கீட்டை மும்பை உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்தது.

 

Trending News