டெல்லி படிப்பார்கஞ்ச் தொழிற்சாலையில் தீ விபத்து: 1 பலி

டெல்லி படிப்பார்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் உள்ள காகித தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.

Updated: Jan 9, 2020, 09:20 AM IST
டெல்லி படிப்பார்கஞ்ச் தொழிற்சாலையில் தீ விபத்து: 1 பலி

டெல்லி படிப்பார்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் உள்ள காகித தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.

டெல்லியில் பட்பார்கஞ் தொழிற்சாலை பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு இருக்கும் தனியார் காகித உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியானார். அங்கு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த விபத்தில் 10க்கும் அதிகமானோர் தொழிற்சாலைக்குள் சிக்கி உள்ளனர். இங்கு ஏற்பட்ட தீயை அணைக்க 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்லியில் கடந்த வாரம்தான் பிராகார்கி பகுதியில் இதேபோல் தனியார் தொழிற்சாலையில் கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.