கேரளா மூத்த எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா (வயது 77) இன்று காலமானார்.
1940-ம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர், தன் படைப்புகளால் மலையாள இலக்கியத்தில் நீங்காத இடம்பெற்றவராக போற்றப்படுபவர். இவர் வங்கத விருதுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விருதுகளை வாங்கி உள்ளார். கேரள சாகித்ய அகாடமி விருது, சாகித்ய அகாடமி விருது, முட்டத்து வர்க்கி விருது, விஷ்வதீபம் விருது உள்ளிட்ட மதிப்புமிக்க பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது சில நூல்கள் தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Malayalam writer Punathil Kunjabdulla passes away at the age of 75 in Kerala's Kozhikode. pic.twitter.com/jZPjrlFBAt
— ANI (@ANI) October 27, 2017
புனத்தில் குஞ்ஞப்துல்லா காலமானாதை அடுத்து, அவருக்கு கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் இதயபூர்வமான இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.
Chief Minister expressed his heartfelt condolence over the demise of noted Malayalam writer Punathil Kunjabdulla. pic.twitter.com/0xL2jKd1uT
— CMO Kerala (@CMOKerala) October 27, 2017