புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்பியுமான பிரிஜுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி வழங்குவதில் மத்திய அரசு ஏன் பிடிவாதமாக இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் உள்ளிட்ட இந்திய மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர், அவருக்கு எதிராக பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டில் இரண்டு எஃப்ஐஆர்களை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து பெண்களுக்கான மரியாதை குறித்து நீண்ட சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார், ஆனால் பெண்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்புகிறார்.
"காவல்துறையும் மற்றும் அரசு அமைப்பும்" இனி புனிதமானது அல்ல என்று இந்தியாவின் மகள்கள் கூறுகிறார்கள்.
கடந்த சில நாட்களாக நாட்டிற்கு பெருமை சேர்த்த மகள்களுக்கு நடந்ததை அனைவரும் பார்த்திருப்பார்கள். 1/3 pic.twitter.com/XrM1yDMK7F
— Mallikarjun Kharge Tamil (@KhargeTamil) May 30, 2023
"காவல்துறையும் அமைப்பும்" இனி புனிதமானது அல்ல என்று இந்தியாவின் மகள்கள் கூறுகிறார்கள். நாட்டிற்கு பெருமை சேர்த்த மகள்களுக்கு என்ன நடந்தது என்பதை கடந்த சில நாட்களாக அனைவரும் பார்த்திருக்கிறார்கள். பெண்களுக்கு மரியாதை குறித்து மோடி, செங்கோட்டையில் இருந்து நீண்ட சொற்பொழிவுகளை ஆற்றுகிறார், ஆனால் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்கு முழு பாதுகாப்பு கொடுக்கிறார்" என்று மல்லிகார்ஜுன கார்கே ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | சாகும் வரை உண்ணாவிரதம்! கங்கை நதியில் பதக்கங்களை போட மல்யுத்த வீரர்கள் முடிவு
எல்லாவற்றிற்கும் மேலாக, பிடிவாதம் என்றால் என்ன, மகள்களுக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை? ஏன் மகள்களை மட்டும் நடுச்சத்தியில் நிற்க வைக்கிறார்கள்? கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறியும் முடிவுக்கு செல்ல அவர்கள் ஏன் தள்ளப்பட்டார்கள் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
காங்கிரஸ் தலைவர் மோடி அரசாங்கத்தின் 'பேட்டி பெச்சாவ்' (மகளைக் காப்பாற்றுங்கள்) பிரச்சாரத்தை கிண்டல் செய்து, 'குற்றவாளியைக் காப்பாற்றுங்கள்' என்று கூறினார்.
மல்யுத்த வீரர்கள், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களில் பலர், டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள போராட்ட தளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் செய்ய அனுமதி மறுப்பு
கடந்த 29 ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி வீரர்கள் பேரணியாக செல்ல முயற்சித்தபோது, அவர்களுக்கு அனுமதி அளிக்க டெல்லி போலீசார் மறுத்த நிலையில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வலுத்தது.
மேலும் படிக்க | இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி பிமல் ஹஸ்முக் படேல்
மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போலீசாரால் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்தும் போராட்டம் நடத்தியவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இனி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடந்த அனுமதி கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஆனால், ஜந்தர் மந்தரை தவிர டெல்லியில் வேற எந்த பகுதியிலும் போராட்டம் நடத்த அனுமதி வாங்கிக்கொள்ளலாம் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் ஆகியோர் ஹரித்வாருக்கு வந்து, அங்குள்ள பிரபல படித்துறையான ‘ஹர் கி பவுரி’க்கு வந்து, மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறும் சிங்குக்கு எதிராக அரசு செயல்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ