நியூடெல்லி: இந்திய மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை நதிக்கு சமர்ப்பிக்க இருப்பதாக போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் சார்பாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது விளையாட்டு உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மல்யுத்த வீரர்களும் தங்கள் பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள புனித கங்கை நதியில் இந்திய நேரப்படி மே 30 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு போடப்போவதாக அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். .
— Bajrang Punia (@BajrangPunia) May 30, 2023
பொது ஊழியர்களால் கலவரம் மற்றும் கடமையை நிறைவேற்றுவதைத் தடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் மீது பல முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. மே 28, ஞாயிற்றுக்கிழமை, இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நாளன்று, நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது, போராட்டம் நடத்திய விளையாட்டு வீரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
மேலும் படிக்க | இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி பிமல் ஹஸ்முக் படேல்
ஒரு காலத்தில் தாங்கள் பெற்ற பதக்கங்களினால் பெருமை கிடைத்தது என்றும், தற்போது அந்தப் பதக்கங்களுக்கான மதிப்பையோ அல்லது தங்கள் தரப்பு நியாயத்தை வேண்டுமென புறந்தள்ளும் அரசியல்வாதிகளின் செயலால், இப்போது பதக்கங்களை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று பஜ்ரங் புனியா, தனது புனியா, தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சக மல்யுத்த வீரர்களுடன் சேர்ந்து, தங்கள் பதக்கங்களை கங்கை ஆற்றில் போட்டுவிட்டு, தேசிய தலைநகர் புது தில்லியில் உள்ள இந்தியா கேட்டில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மைனர் உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யுமாறு பலரும் கோரிக்கை எழுப்பினார்கள். ஆனால், அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், காமன்வெல்த் பதக்கம் வென்ற வினேஷ் போகட், மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் போராட்டங்களைத் தொடர்ங்கினார்கள்.
பிரிஜ் பூஷன் சிங் மீது விளையாட்டு வீராங்கனைகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரித்த ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழு அறிக்கையை அளித்துவிட்டது. ஆனால், அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதும், அறிக்கை வெளியிடப்படவில்லை. எனவே, இந்தியாவின் மல்யுத்த வீரர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் தலைநகர் ஏப்ரல் 23ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷனின் அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் விளையாட்டு அமைச்சகம் பறித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறையினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மற்றும் பிறருக்கு எதிராக கலவரம், சட்டவிரோத கூட்டம் மற்றும் பொது ஊழியர்கள் கடமையை செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. காவல் துறையின் மூத்த அதிகாரி தேபேந்திர பதக், மல்யுத்த வீரர்கள் "சட்டம் ஒழுங்கை மீறியதற்காக" தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
திங்களன்று, போராட்டக்காரர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் ட்வீட்டுக்கு பதிலளித்த பஜ்ரங் புனியா. “இந்த ஐபிஎஸ் அதிகாரி எங்களை சுடுவது பற்றி பேசுகிறார். எங்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள்... நேரில் வருகிறேன், நான் என் முதுகைக் காட்ட மாட்டேன், உங்கள் புல்லட்டை என் மார்பில் எடுத்துக்கொள்வேன் என்று சத்தியம் செய்கிறேன் ”என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையில், விளையாட்டு வீரர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத மத்திய அரசு மீது பல்வேறு தரப்பினரும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பதிவிட்டுள்ள டிவிட்டர் செய்தி இது...
Even while protesting in front of the Parliament, which stands as a symbol of justice and truth, our wrestlers got mistreated & manhandled instead of justice.
It is a shame that our champions are being treated this way!I strongly condemn this act by Delhi Police and stand by… pic.twitter.com/G5H4QMwwzy
— DK Shivakumar (@DKShivakumar) May 28, 2023
நீதி மற்றும் நியாயத்தின் சின்னமாக விளங்கும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்திய நமது மல்யுத்த வீரர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமா? அவர்கள் தவறாக நடத்தப்பட்டனர். நாட்டுக்கு பெருமைத் தேடித் தந்த நமது சாம்பியன்கள் இப்படி நடத்தப்படுவது வெட்கக்கேடானது!
டெல்லி காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இதுபோன்ற அடக்குமுறை காலங்களில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறேன்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், கர்நாடக மாநில துணை முதலமைச்சருமான டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | செங்கோல் தற்போது தான் உரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ