செங்கோல் வைக்கப்பட்டிருக்கும் இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி பிமல் ஹஸ்முக் படேல்

Parliament New building Architect: இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி யார் தெரியுமா? அவரது அனுபவமும் திறமையும் குடத்தில் இட்ட விளக்கல்ல...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 30, 2023, 04:43 PM IST
  • இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி
  • நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் ஆர்கிடெக்ட் பிமல் ஹஸ்முக் படேல்
  • பிமல் ஹஸ்முக் படேல் கட்டிய பிரபல கட்டடங்கள்
செங்கோல் வைக்கப்பட்டிருக்கும் இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி பிமல் ஹஸ்முக் படேல் title=

புதுடெல்லி: இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரான பிமல் ஹஸ்முக் படேல் நாடாளுமன்றத்தின் புதிய முக்கோண கட்டிடத்தின் மூளையாக செயல்பட்டார், 2023 மே 28 ஞாயிற்றுக்கிழமையன்று திறப்புவிழா நடத்தப்பட்ட இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் சிற்பிபிமல் ஹஸ்முக் படேல். பழம்பெரும் கட்டிடக்கலைஞர் பால்கிருஷ்ண தோஷியின் மாணவர் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.

காசி விஸ்வநாத் தாழ்வாரம், சபர்மதி போன்ற மெகா கட்டமைப்புகளை வடிவமைப்பதில் பங்களித்துள்ள  கடந்த சில ஆண்டுகளில், அவர் நாட்டில் மிகவும் கடினமான நவீன உள்கட்டமைப்பு திட்டங்களை வெற்றிகரமாக வழங்கியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு, மக்களவை சபாநாயகர் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரிடம் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவது குறித்து பரிசீலிக்குமாறு கோரியபோது, “எதிர்காலத்தை சமாளிக்க நாம் உருவாக்கும் நாடாளுமன்ற கட்டடத்தை நாம் எப்படி கட்டுகிறோம் என்பது நாம் யார், நமது கடந்த காலத்தை எப்படி பார்க்கிறோம் என்பதை வலிமையாக உணர்த்தும், அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கட்டடத்தை சிறப்பாக கட்டவேண்டும்" என்று கட்டடக்கலை வல்லுநர் விமல் படேல் தெரிவித்தார்.

மேலும் படிக்க | புதிய நாடாளுமன்ற கட்டடம்: நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய 10 தகவல்கள் இதோ!

தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு2023 இல், அவர் அன்று சொன்ன வார்த்தைகளின் பிரதிபலிப்பாய் உயர்ந்து நிற்கிறது இந்திய நாடாளுமன்றத்தின் புதியக் கட்டடம்

அனைத்து கொண்டாட்டங்கள் மற்றும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரமாண்ட திறப்பு விழா, இனிதே முடிவடைந்ஹ்டுவிட்டது. ஜனநாயகத்தின ஆலயமாய் திகழும் இந்த கட்டிடத்தின் முதன்மை வடிவமைப்பாளரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை...  

சிறந்த கட்டிடக் கலைஞர் பிமல் படேல்
1961 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த பிமல் படேல்,1978 முதல் 1984 வரை சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் (CEPT) கட்டிடக்கலை பயின்றார். 1981 ஆம் ஆண்டில், அவர் இலகுரக கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்காக அறியப்பட்ட ஜெர்மன் கட்டிடக் கலைஞரும் கட்டமைப்பு பொறியாளருமான ஃப்ரீ ஓட்டோவிடம் பயிற்சி பெற்றார்.

மேலும் படிக்க | திரிபுரா முதல் தமிழகம் வரை... பல்வேறு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம்!

1984 இல் CEPT இல் கட்டிடக்கலையில் தனது முதல் தொழில்முறை பட்டம் பெற்ற பிறகு, அகமதாபாத்தில் ஒரு வருடம் பணிபுரிந்த பிறகு, படேல் பெர்க்லிக்கு சுற்றுச்சூழல் வடிவமைப்பு கல்லூரியில், CED இல் படித்தார். 1988 மற்றும் 1995 இல் முறையே நகர மற்றும் பிராந்திய திட்டமிடல் துறையில் எம்.ஆர்க் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

1990 இல் தொடங்கிய அவரது கட்டட வடிவமைப்புப் பணிகளில், முதலாவது அகமதாபாத்தில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன வளாகம் ஆகும். இது 1992 இல் கட்டிடக்கலைக்கான ’ஆகா கான்’ விருதை வென்றது.

ஆகா கான் அகாடமி விருதைத் தவிர, பல விருதுகளைப் பெற்றுள்ளார் பிமல் பட்டேல்.

விருதுகளை வென்ற விமல் பட்டேலின் கட்டட வடிவமைப்புகள்

அகமதாபாத் மேலாண்மை சங்கம், பூஜ் வளர்ச்சித் திட்டம் மற்றும் நகர திட்டமிடல் திட்டங்கள் (பூகம்பத்திற்குப் பிந்தைய), CG சாலை மறுமேம்பாட்டு, இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், குஜராத் உயர் நீதிமன்றம், இந்திய மேலாண்மை நிறுவனம் என பல ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க மற்றும் விருது பெற்ற திட்டங்களில் அடங்கும். அகமதாபாத் புதிய வளாகம், கன்காரியா ஏரி, சபர்மதி ஆற்றங்கரை மற்றும் காந்திநகரில் உள்ள ஸ்வர்னிம் சங்குல்

மேலும் படிக்க | செங்கோல் தற்போது தான் உரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

பிமல் படேலின் குறிப்பிடத்தக்க திட்டங்கள்
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தைத் தவிர படேலின் சிறந்த கட்டடக்கலை வடிவமைப்புகளில் சில:

ஐஐஎம், அகமதாபாத் (புதிய கட்டிடம்)

டாடா CGPL டவுன்ஷிப், கட்ச்

சபர்மதி ஆற்றங்கரை மேம்பாட்டுத் திட்டம்

பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம், காந்திநகர்

ஆகா கான் அகாடமி, ஹைதராபாத்

அமைச்சர்கள் தொகுதி மற்றும் செயலக வளாக வளர்ச்சி, குஜராத் அரசு, காந்திநகர்

விஸ்வநாத் தாம், ஸ்ரீ காசி விஸ்வநாத் மந்திர், வாரணாசி

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் முக்கோண வடிவமைப்புக்கான உத்வேகம்
புதிய பாராளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் அமைந்திருப்பதற்கும் இந்து மதத்திற்கும் தொடர்புடையதாகவும் கூறப்பட்டாலும், இந்த கட்டிடம் அமைந்துள்ள நிலம் முக்கோண வடிவில் இருப்பதே முக்கிய காரணம் என்றும், வெவ்வேறு மதங்களில் உள்ள புனித வடிவியலுக்கு அங்கீகாரம் வழங்குவதாக இந்த வடிவம் அமைந்துள்ளது என்றும் கட்டிடக்கலை வல்லுநர் விமல் படேல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கிய திருவாடுதுறை ஆதீனம்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News