நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் : மம்தாவின் அதிரடி அறிவிப்பு

2024 நாடாளுமன்றத் தேர்தலை நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன் உள்ளிட்டோருடன் இணைந்து சந்திக்க உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : Sep 8, 2022, 08:56 PM IST
  • 2024 நாடாளுமன்றத் தேர்தல்
  • ஒன்று சேர்கிறதா எதிர்க்கட்சிகள்?
  • நிதிஷ்குமாருடன் கை கோர்த்த மம்தா
நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் : மம்தாவின் அதிரடி அறிவிப்பு title=

கொல்கத்தாவில் கட்சி நிர்வாகிகளிடையே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

"ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும்  ரூ.10 கோடி வழங்கி அரசை திரிணாமுல் காங்கிரஸ் அரசை வீழ்த்த முயன்றனர். நான் அவர்களை கையும் களவுமாக பிடித்தேன். ஜார்கண்ட் மாநிலத்தையும் காப்பாற்றினோம். 2024 தேர்தலுக்கு நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதைப் பாருங்கள். 

மேலும் படிக்க | ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி!

இப்போது நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன் ஆகியோர் உள்ளனர். நான் இருக்கிறேன். அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக உள்ளன. 280-300 இடங்களில் வெற்றி பெற்ற ஆணவமே பாஜகவின் எதிரியாக இருக்கும். ராஜீவ் காந்தி காலத்தில் காங்கிரஸ் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அது நிலைக்கவில்லை.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தலாம் என பாஜக நினைக்கிறது. இதுபோன்ற தந்திரங்களை அவர்கள் பின்பற்றினால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என மம்தா பானர்ஜி கூறினார். 

மேலும் படிக்க | Delhi MLAs: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை காணவில்லை! மாயமான டெல்லி எம்எல்ஏக்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News