ரத்தத்தை உறைய வைக்கும் தில்லி கொலை... பொது இடத்தில் 16 வயது காதலியை கொடூரமாக குத்தி கொன்ற நபர்...!

வடக்கு டெல்லியின் ரோகினியில் உள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவான மிகவும் அதிர்ச்சி தரும் காட்சிகள், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் ஒரு பிஸியான பாதையில் சிறுமியை அவளது காதலன் சாஹால் கொடூரமாக தாக்கி கொல்வதை காட்டுகிறது, ஆனால் அவளைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2023, 05:52 PM IST
  • டெல்லி இப்போது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது: DCW தலைவர்.
  • ரத்தத்தை உறைய வைக்கும் கொலை கேமராவில் சிக்கியது.
  • கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீதியோரத்தில் கிடப்பதாக தகவல் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ரத்தத்தை உறைய வைக்கும் தில்லி கொலை... பொது இடத்தில் 16 வயது காதலியை கொடூரமாக குத்தி கொன்ற நபர்...!  title=

புதுடெல்லி: ஷஹபாத் பால் பண்ணை பகுதியில் தனது 16 வயது காதலியை மிக மிக கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை டெல்லி போலீசார் திங்கள்கிழமை மாலை கைது செய்தனர். அவர் 20 வயதான சாஹில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் சாஹில் கைது செய்யப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறுமியை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய குற்றவாளியை கைது செய்ய டெல்லி போலீசார் 6 தனிப்படைகளை அமைத்துள்ளனர். 

டெல்லி வடக்கு வடக்கு கூடுதல் காவல்துறை துணை ஆணையர் ராஜா பந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெற்றோர் இந்த விவகாரத்தில் ஒத்துழைக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். "சிறுமி இறந்து கொண்டு வரப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவளது உடலில் பல காயங்கள் இருந்தன. 20-க்கும் மேற்பட்ட முறை குத்தப்பட்டாள்" என்று காலவல் துறை அதிகாரி ANI இடம் பேசும்போது கூறினார்.

டெல்லி இப்போது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது: DCW தலைவர்

கொடூரமான கொலை குறித்து கருத்து தெரிவித்த DCW தலைவர் ஸ்வாதி மாலிவால், தேசிய தலைநகர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது எனவே அரசு இது குறித்து உயர்மட்டக் கூட்டத்தை உடனே நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். "ஒரு 16 வயது சிறுமி 40-50 முறை குத்தப்பட்டாள், பின்னர் பலமுறை கல்லால் அடிக்கப்பட்டாள், அதன் பிறகு அவள் இறந்தாள். இவை அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. பலர் இதை செயலை பார்த்தும் சிறுமியை காப்பாற்ற நினைக்கவில்லை. டெல்லி மிகவும் மோசமாகிவிட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர், டெல்லி துணை நிலை ஆளுநர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணைய தலைவர் மற்றும் டெல்லி முதல்வர் ஆகியோருடன் உயர்மட்டக் கூட்டத்தை அழைக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஸ்வாதி மாலிவால் கூறினார்.

ரத்தத்தை உறைய வைக்கும் கொலை கேமராவில் சிக்கியது

ரத்தத்தை உறைய வைக்கும் கொலை காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோ காட்சிகள், 16 வயது சிறுமியை பலமுறை கத்தியால் குத்தியதையும், பல முறை கல்லால் தாக்கப்பட்டதையும் காட்டுகிறது. மக்கள் அவர்களைக் கடந்து செல்லும்போது, ​​பயத்துடன் வெறித்துப் பார்த்தார்கள், ஆனால் தாக்குதலை நிறுத்த எதுவும் செய்யவில்லை. வடக்கு டெல்லியின் ரோகினியில் உள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவான மிகவும் அதிர்ச்சி தரும் காட்சிகள், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் ஒரு பிஸியான பாதையில் சிறுமியை அவளது காதலன் சாஹால் கொடூரமாக தாக்கி கொல்வதை காட்டுகிறது, ஆனால் அவளைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

மேலும் படிக்க | நர்ஸை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டிய நபர்!  ‘தலை’யால் சிக்கியது எப்படி? காத்திருந்த ட்விஸ்ட்!

காதலர்கள் சண்டையிட்டதாக போலீசார் தெரிவித்தனர்

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீதியோரத்தில் கிடப்பதாக தகவல் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மே 28 அன்று, ஒரு சிறுமியின் கொலை தொடர்பாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று கூறிய போலீசார், உள்ளூர் குழு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியது. உள்ளூர் விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் தொடர்பு இருந்தது, ஆனால் அவர்களுக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டவரின் தந்தையின் புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு (ஐபிசி) 302 (கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்) கீழ் ஒரு வழக்கும் ஷாபாத் பால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “மைனர் பெண் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்டது வருத்தம், துரதிர்ஷ்டம். குற்றவாளிகளுக்கு பயம் இல்லை. துணை நிலை ஆளுநர், சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு, தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்.டெல்லி மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிம," என பதிவிட்டுள்ளார்.

டெல்லி அமைச்சர் அதிஷியும் துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவை கடுமையாக சாடியதோடு, தேசிய தலைநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். "இந்த கொடூரமான செயலைப் பார்த்து என் ஆன்மா நடுங்கியது. டெல்லி துணை நிலை ஆளுநருக்கு டெல்லி மக்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசியலமைப்பு வழங்கியுள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் அவர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்திற்கு பிரச்சனை தருவதில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார். டெல்லி பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என துணை நிலை ஆளுநரை கைகளை கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இன்று டெல்லியில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை" என் று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்பி கெளதம் கம்பீர் அங்கு இருந்த மக்கள் தலையிடவில்லை என்று பதிலளித்தார். "தனது சகோதரி அல்லது மகள் மீது இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடந்திருந்தால், இவர்கள் இப்படியே விட்டு விட்டு சென்று இருப்பார்களா? மனிதர்கள் விலங்குகளாகி விட்டார்களா " என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | சாம்பாரில் விஷம் கலந்து மாமனார், மாமியாரை கொலை செய்த மருமகள்! ஒன்றரை வருடம் கழித்து பிடிபட்ட சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News