கேரளா CM-ஐ விமர்சித்த இராணுவ வீரர் வீடியோ போலியானது -ADG PI

கேரளா முதலவர் பினராயி விஜயனை இராணுவ சீருடை அணிந்த வீரர் ஒருவர் விமர்சிக்கும் வீடியோ போலியானது என இந்திய இராணுவம் அறிவிப்பு...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2018, 05:05 PM IST
கேரளா CM-ஐ விமர்சித்த இராணுவ வீரர் வீடியோ போலியானது -ADG PI title=

கேரளா முதலவர் பினராயி விஜயனை இராணுவ சீருடை அணிந்த வீரர் ஒருவர் விமர்சிக்கும் வீடியோ போலியானது என இந்திய இராணுவம் அறிவிப்பு...! 

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்தில், சுமார் 8.5 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 370 பேர் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கேரளாவில் வெள்ளப்பெருக்கால் தடை செய்யபட்டிருந்த போக்குவரத்து மற்றும் விமான சேவைகளை இன்று மீண்டும் தொடங்கினர். இங்கு இராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இராணுவ சீருடை அணிந்திருக்கும் வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கேரள முதல்வரை விமர்சித்துள்ளார், நாங்கள் உங்கள் மாநிலத்திற்கு உதவி செய்வதற்கு வந்துள்ளோம், ஆனால் நாங்கள் உங்கள் மாநிலத்தை அபகரித்துவிடுவோம் என நீங்கள் நினைக்கிறீர்கள். 

உங்கள் மாநில அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் இராணு உதவி தேவையில்லை என கூறியுள்ளார். இந்திய இராணுவ வீரர்கள் மீது எதற்காக இப்படி விரோதம் கொண்டுள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

ஆனால், இந்த வீடியோ போலியானது என்று இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும், அந்த நபரும் இராணுவ வீரர் கிடையாது. வெள்ள மீட்பு பணிகளில் இப்படி தவறான தகவலை வெளியிட்டுள்ளார்கள், இதனை யாரும் இதுபோன்ற போலியான வீடியோ பதிவுகளை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது. 

இந்த போலியான வீடியோ கேரளாவில் வைரலானதையடுத்து, அந்த வீடியோவை தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

 

Trending News