கோவா முதல்வரானார் மனோகர் பாரிக்கர்!

கோவா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்போற்க உள்ள மனோகர் பாரிக்கர் தற்போது வகித்து வரும் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Last Updated : Mar 14, 2017, 09:37 AM IST
கோவா முதல்வரானார் மனோகர் பாரிக்கர்! title=

புதுடெல்லி: கோவா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்போற்க உள்ள மனோகர் பாரிக்கர் தற்போது வகித்து வரும் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கோவா மாநில முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கரை கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசுக்கு பாஜக கொண்டு வந்தது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாதுகாப்பு துறை மந்திரியாக பதவியேற்றார். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான மனோகர் பாரிக்கர் மாநில அரசுக்கு திரும்பலாம் என தகவல் அவ்வபோது வெளியாகியது. 

இந்நிலையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கோவா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ள கோவாவில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்குகிறது. பாரதீய ஜனதாவுக்கு 13 இடங்கள் கிடைத்தன. கோவா பார்வர்டு கட்சி, மராட்டியவாடி கோமந்த கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளன. 

சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைத்தது. 3 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். கோவாவில், ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரி ஆவதற்கு பாரதீய ஜனதா கட்சி ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து அவர் மாநில கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து, தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கவர்னரிடம் கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். நாளை மாலை மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார் என அறிவிக்கப்பட்டது.

மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள நிலையில் தன்னுடைய பாதுகாப்பு துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக இப்போது நிதி மந்திரியாக உள்ள அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து கோவா பாஜக எம்எல்ஏ-க்கள் கோரிக்கையின்பேரில் அந்த மாநில முதல்வராக பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள மனோகர் பாரிக்கர் பதவியேற்க உள்ளார்.

இன்று பொறுப்பேற்க உள்ளதால் தன் வசம் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

Trending News