யோகி ஸ்டைலில் வர வேண்டும் - உ.பி, பள்ளியின் உத்தரவு!

Last Updated : Apr 28, 2017, 01:28 PM IST
யோகி ஸ்டைலில் வர வேண்டும் - உ.பி, பள்ளியின் உத்தரவு! title=

உத்திரபிரதேசத்தில் ஒன்று பள்ளி அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யாநாத் ஹேர் ஸ்டைலில் வர உத்தரவிட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பாஜக வெற்றி பெற்று யோகி ஆதித்யாநாத் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பொறுபேற்றது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அமல் படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளி ஒன்று 9-ம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2,800 மாணவர்கள் இனி, யோகியைப்போல தான் முடிவெட்டி பள்ளிக்கு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

இது தவிர, அந்த பள்ளிவளாகத்தில் அசைவம், முட்டை உள்ளிட்ட உணவுகளும் சாப்பிட அனுமதியில்லை.

Trending News