80000000 பெண்களுக்கு 100 நாட்களில் இலவச கேஸ் இணைப்பு: மோடி அரசு இலக்கு

மோடி அரசாங்கத்தின் அடுத்த பெரிய இலக்கு, அடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி ஏழை இல்லத்தரசிகளுக்கு உஜ்வாலா திட்டம் மூலம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 17, 2019, 04:13 PM IST
80000000 பெண்களுக்கு 100 நாட்களில் இலவச கேஸ் இணைப்பு: மோடி அரசு இலக்கு title=

புதுடில்லி: மோடி 2.0 இன் அடுத்த பெரிய இலக்கு, அடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி இல்லத்தரசிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு (பிபிஎல்) குடும்பத்திற்குக் கீழே வாழும் பெண்கள் உறுப்பினர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. மே 2016-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2019 பொதுத்தேர்தலில் மோடி தலைமையிலான அரசாங்கம் அமைப்பதற்கு இது பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா என்ற இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் 2016-இல் அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு எரிவாயு இணைப்புக்கும் வைப்புத் தொகை உள்ளிட்டவற்றுக்கு ரூ.1600 மத்திய அரசு மானியமாக சம்பந்தப்பட்ட எரிவாயு விநியோகஸ்தருக்கு வழங்கிவிடும். மேலும், எரிவாயு அடுப்பு, முதல் எரிவாயு உருளை ஆகியவற்றுக்கு உத்தேசமாக ரூ.1600 சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரே பயனாளிக்கு கடன் வசதியில் வழங்க வேண்டும். இந்தக் கடனை மறுமுறை எரிவாயு உருளை வழங்கும்போது அளிக்கப்படும் மானியத் தொகையில் கழித்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இன்னும் அதிகமானோருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை உஜ்ஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 7.2 கோடி பேர் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் பெற்று பயனடைந்துள்ளனர். இந்த பயனாளிகளின் எண்ணிக்கையை எட்டு கோடி ஆகா உயர்த்த வேண்டும் என பணிகள் நடைபெற்று வருவதாக அரசாங்க அதிகாரி கூறினார். அதாவது அடுத்த 100 நாட்களுக்குள் 8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதே இலக்காக மத்திய அரசு கொண்டுள்ளது எனவும் கூறினார்.

இது தவிர, வரும் மாதங்களில், ஒன்று முதல் இரண்டு கோடி எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படும். அதே நேரத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 100 சதவீத ஏழை பெண்கள் எரிவாயு இணைப்புகள் அல்லது எல்பிஜி வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது நாட்டில் எரிவாயு பயன்படுத்தும் பெண்களின் சதவீதம் 93-94 ஆக உள்ளது.

Trending News