முன்னாள் காதலன் பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகை புகார்!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகை காவல்துறையில் புகார்!!

Last Updated : Jul 15, 2019, 10:46 AM IST
முன்னாள் காதலன் பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகை புகார்!! title=

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகை காவல்துறையில் புகார்!!

மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் மற்றும் நடிகை ஒருவர் தனது முன்னாள் காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியதாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி, புகார் அளித்த 26 வயது நடிகை, நடிகர் மற்றும் மாடலான 34 வயதுடையவரை கடந்த 2017 ஆம் ஆண்டில் ஒரு படப்பிடிப்பின் போது சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவர் உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருவதாகவும், தனது காதலியை சந்திக்க அடிக்கடி மும்பைக்கு தவறாமல் சென்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், அவரை தான் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து, தான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறவில்லை என தெரிவித்துள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

 குற்றம் சாட்டப்பட்டவர் தனது நண்பர்களிடமிருந்து ஒரு தூரத்தை வைத்திருக்கும் படி கேட்டுக் கொண்டார். எந்த ஆண் நடிகர்களுடனோ அல்லது மாடல்களுடனோ வேலை செய்யக்கூடாது என்று புகார் கூறினார். அவள் அவனுக்கு செவிசாய்க்கவில்லை என்றால், அவன் அவளை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்தான், மேலும் தன்னை  அடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

"குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக IPC பிரிவு 376 (2) (n), 323, 504 506 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை FIR பதிவு செய்துள்ளோம். அவர் தற்போது மும்பையில் இல்லை, நாங்கள் அவரைத் தேடுகிறோம்" என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Trending News