மும்பையில் பத்திரிகையாளர் ஹெர்மன் கோம்ஸ் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்..!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஹெர்மன் கோம்ஸ் என்ற பத்திரிகையாளர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தனது வேலையை மேடித்து விட்டு நபர்களுடன் டாக்ஸி ஒன்றில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டின் அருகே நேற்று அதிகாலை சுமார் 1.30-க்கு வந்து கொண்டிருந்த போது, அவரை 6 பேர் கொண்ட கும்பல் கண்காணித்துக் கொண்டிருந்தது. இதன்பின்னர், கோம்ஸை தகாத வார்த்தைகளால் பேசிய கும்பலில் இருந்தவர்கள், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் கோம்ஸின் முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து கோம்ஸ் காவல் நிலையத்திற்கு சென்று இந்த சம்பவம் குறித்து புகார் செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகையாளர் சங்கம், கோம்ஸ் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.
Police have arrested all four accused who attacked a journalist and his friend in Mumbai near Gamdevi police station yesterday. (file pic - journalist Herman Gomes who was attacked) pic.twitter.com/PFoM60WZSi
— ANI (@ANI) October 15, 2018
மேலும், இந்த விவகாரத்தில் முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர் ஹெர்மன் கோம்ஸ்-சை தாக்கிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இரண்டு நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.