கர்தார்பூர் நடைபாதை திறப்பு விழாவில் கட்டாயம் கலந்துகொள்வேன்: சித்து

எனது 'நண்பன்' இம்ரான் கான் என்னை கார்த்தார்பூர் நடைபாதை விழாவுக்கு அழைத்திருக்கிறார், நிச்சயம் நான் அந்த விழாவில் கலந்துகொள்வேன் என நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2018, 11:39 AM IST
கர்தார்பூர் நடைபாதை திறப்பு விழாவில் கட்டாயம் கலந்துகொள்வேன்: சித்து title=

எனது 'நண்பன்' இம்ரான் கான் என்னை கார்த்தார்பூர் நடைபாதை விழாவுக்கு அழைத்திருக்கிறார், நிச்சயம் நான் அந்த விழாவில் கலந்துகொள்வேன் என நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

சீக்கிய குருவான குருநானக் தேவ் தனது கடைசி காலத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் வசித்தார். முதல் சீக்கிய குருவான அவர் இங்கு 12 ஆண்டுகள் வசித்ததாகவும், அவர் மெக்காவுக்கு சென்ற போது அவருக்கு அளிக்கப்பட்ட உடைகள் இங்கு உள்ளதாகவும் நம்பப்படுகிறது. அருகிலேயே குருத்வாரா தாலி சாஹிப் என்ற இடமும் இருக்கிறது.

தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கர்தார்பூர் இருக்கிறது. குருநானக் தேவின் 549-ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி கர்தார்பூரில் சிறப்பு வழிபாடுகள் நடக்க இருக்கிறது. இதற்காக, இந்தியாவிலிருந்து செல்லும் 3700 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது.

ஆண்டுதோறும் சீக்கிய மதத்தினர் இங்கு வழிபாட்டுக்கு செல்வார்கள் என்பதால் இந்திய பஞ்சாபில் இருந்து சர்வதேச எல்லை வழியாக சாலை அமைப்பது, யாத்ரீகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்திய சீக்கியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்யக்கோரி பாகிஸ்தான் அரசை வலியுறுத்துவோம் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

குருநானக் தேவ் பிறந்தநாள் விழாவுக்காக பாகிஸ்தான் வரும் 28-ம் தேதி எல்லையை திறக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு பஞ்சாப் மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தானிய பிரதமர் மற்றும் அவரது நண்பரால் விடுக்கப்பட்ட அழைப்பை சித்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 

இந்து குறித்து பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில், "பாபா நானக் இரு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து உதவுகின்றன இன்று கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை இன்று நிறைவேறியுள்ளது, இந்த செயல் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக என் நண்பர் (இம்ரான் கான்) என்னை அழைத்திருக்கிறார், நான் நிச்சயம் அந்த விழாவிற்கு செல்வேன்," என்று அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கை கருதி இந்த முயற்சியை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 28 ஆம் தேதி பாக்கிஸ்தானின் கார்த்தார்பூர் நடைபாதை விழாவை துவக்கி வைக்கிறார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்து, அந்நாட்டு ராணுவத் தளபதியை கட்டிப்பிடித்து கைகுலுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News