புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாளை முதல் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு...!!!
மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை முதல் 31 ஆம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தியாவில் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருக்கும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கல்விக் கொள்கையைப் பலர் வரவேற்றுள்ளனர். அதே சமயம் இதற்கு அதே அளவுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ALSO READ | இன்னும் 73 நாட்களில் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெரும் இந்தியா..!
இதன்படி புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை முதல் (24/8/2020) வரும் 31 ஆம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் http://Innovateindia.mygov.in/nep2020 என்ற இணையதள முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த இணையதள முகவரியில் சென்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.