சண்டிகர்: பஞ்சாப் அரசியலில் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் மேலும் வலுத்துள்ளது. இது பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
2019 மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், அங்கு மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் சித்து பங்கேற்க்க வில்லை. ஆனால் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்துவிடம் இருந்த உள்ளாட்சி துறை பொறுப்பை பறித்தார். அந்த துறையை தன்வசம் வைத்துக்கொண்டார்.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, அமைச்சரவை கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. எந்தவித அறிவிப்புமின்றி என்னிடம் இருந்த துறை பறித்துக்கொண்டார். இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை என ஆவேசமாக கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றதில் இருந்தே பஞ்சாப் முதல்வர் மற்றும் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இடையேயிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.