ஜிஎஸ்டி தாக்கல் செய்யாதவர்களுக்கு இ-வே பில் எடுக்க தடை..!!

ஜிஎஸ்டி வரியை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு தாக்கல் செய்யாதவர்கள் இ-வே பில் எடுக்க தடை விதிக்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது!!

Updated: Apr 26, 2019, 10:19 AM IST
ஜிஎஸ்டி தாக்கல் செய்யாதவர்களுக்கு இ-வே பில் எடுக்க தடை..!!

ஜிஎஸ்டி வரியை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு தாக்கல் செய்யாதவர்கள் இ-வே பில் எடுக்க தடை விதிக்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது!!

ஜிஎஸ்டி வரம்புக்குள் இருக்கும் தொழில் நிறுவனங்கள் அவர்களின் சரக்கு மற்றும் சேவை வரியினை ஒவ்வொரு மாதமும் 20-ஆம் தேதிக்குள் செலுத்துவது அவசியம். அந்த வகையில் தொடர்ந்து 2 மாதங்கள் இந்த சரக்கு மற்றும் சேவை வரியினை கட்டாமல் இருந்தால் சரக்குப் போக்குவரத்திற்காக இ-வே பில் எடுக்க 6 மாதத்திற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜீன் 21 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

மேலும், GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் பதிவு செய்த வணிக நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு அனுப்பும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்கிற்கு, 'இ - வே பில்' எனப்படும் மின் வழிச்சீட்டு அவசியமாகும். சரக்கு கொண்டு செல்லும் போது, வரி அதிகாரிகள் ஆய்வு செய்தால், இந்த சீட்டை காட்ட வேண்டும்.

வரி ஏய்ப்பை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த மின்வழிச் சீட்டு திட்டத்திலும், சில ஓட்டைகள் மூலம், வரி செலுத்தாமல் பல்வேறு முறைகேடுகள் நடப்பது, தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, ஏப்., - டிசம்பர் வரையிலான, ஒன்பது மாதங்களில், 15 ஆயிரத்து, 278 கோடி ரூபாய் அளவிற்கு, ஜி.எஸ்.டி., ஏய்ப்பு, விதிமீறல் போன்றவை நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, தொடர்பாக, 3,626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முறைகேடுகளை தடுக்க, மின்வழிச் சீட்டு நடைமுறையில் சில மாற்றங்களை, மத்திய நிதியமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.