மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பெயரிலி வருமான வரி கணக்கிட்டு முறையின் கீழ், நாடு முழுவதும் உள்ள எந்த அதிகாரிக்கும், வருமான வரி கணக்கிடும் பணி எவருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கப்படும்
வருமான வரி கணக்கீடு செய்யும் அதிகாரியின் அடையாளம் வெளியிடப்படமாட்டாது.
ALSO READ | நேர்மையாக வரி செலுத்துவோர் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்து ஊக்கம் அளிக்கும் வகையில், Honoring the Honest என்னும் திட்டத்தை வீடியோ கான்ஃபரென்ஸிங் மூலம் தொடக்கி வைத்தார். வரி சீர்திருத்தங்கள் மூலம் நாட்டில் வரி செலுத்தும் முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றார்.
Faceless income tax assessment scheme, அதாவது, பெயரிலி வருமான வரி கணக்கீட்டு திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், Faceless Appeal, அதாவது பெயரிலி முறையீடு செப்டம்பர் 25ம் தேதி முதல் அமல் படுத்தப்படும்.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பெயரிலி வருமான வரி கணக்கீடு மற்றும் அது தொடர்பான மேல்முறையீட்டு நடைமுறையின் கீழ், நாடு முழுவதும் உள்ள எந்த அதிகாரிக்கும் முறையீடுகள் இணையம் மூலம் தானாகவே ஒதுக்கப்படும், மேலும் முறையீட்டை தீர்மானிக்கும் அதிகாரியின் அடையாளம் வெளியிடப்படாது. இதனால், எந்த அதிகாரியிடம் முறையீடு செல்கிறது அல்லது கணக்கீடு செல்கிறது என்பதை அறிந்து கொள்ள இயலாது.
"இப்போது வரை, ஒரு நகரத்தில் வரி தொடர்பான அனைத்து விஷயங்களும் அந்த நகரத்தின் வருமான வரித் துறை கையாளகிறது, அந்த நகரத்தின் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்போது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இணையம் மூலம் நாடெங்கிலும் உள்ள வருமான வரித்துறை அதிகாரியில் ஒருவர் ராண்டமாக தேர்வு செய்யப்பட்டு, அவர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும், "பிரதமர் கூறினார்.
பெயரிலி வருமான வரி மேல்முறையீட்டு முறையின் அம்சங்கள் இங்கே:
- வருமான வரி தொடர்பான முறையீடுகள், நாட்டில் எந்தவொரு அதிகாரிக்கும் தானியங்கி முறை மூலம் தோராயமாக ஒதுக்கப்படும்.
- மேல்முறையீட்டை தீர்மானிக்கும் அதிகாரிகளின் அடையாளம் வெளியிடப்படாது.
- வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகம் செல்லவோ அல்லது அதிகாரியை சந்திக்கவோ தேவையில்லை.
- வருமான வரி அதிகாரிகள் குழு, மேல்முறையீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும்.
- பெயரிலி வருமான வரி மேல்முறையீட்டிற்கான விதிவிலக்குகளில், கடுமையான மோசடிகள், பெரிய அளவிலான வரி ஏய்ப்பு, முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் ஆகியவை அடங்கும்.
- இதில், சர்வதேச வரிவிதிப்பு மற்றும் கறுப்புப் பணம் சட்டம் மற்றும் பினாமி சொத்து ஆகியவற்றிற்கும் விலக்கு உண்டு
வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் இதை தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி வரி தாக்கல் செய்யும் தடையற்ற எளிதான முறையை உருவாக்குவதே இதன் குறிக்கோள் என்றார். இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது நம்பக தன்மை அதிகரிக்கிறது. இது வருமான வரித்துறையில் மிக முக்கியமான சீர்திருத்தமாக கருதப்படுகிறது.
குடிமக்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு வரிகளை நேர்மையாக செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
வருமான வரியை தாக்கல் செய்வதை எளிதாக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் இடையில், கடந்த 6-7 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை கோடி அதிகரித்துள்ளது என்றும், ஆனால் 130 கோடி நாட்டில் இது இன்னும் மிகக் குறைவு என்று, பிரதமர் மேலும் கூறினார்.
நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை நிலை மாறும் போது இந்தியா முன்னேறும் என அவர் குறிப்பிட்டார். Faceless income tax assessment scheme துவக்க நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.