Jio 5G: சீன நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ; ஏர்டெல் - VI கலக்கம்; மாஸ் பிளான் பின்னணி

5ஜி நெட்வொர்க்கை தடங்கலின்றி கொடுக்க ஜியோ ஸ்கெட்ச் போட்டு சீன நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இது ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 12, 2022, 07:38 PM IST
  • ஜியோ நிறுவனத்தின் மாஸ் ஸ்கெட்ச்
  • ஒன்பிளஸ் நிறுவனத்துடன் கூட்டு
  • 5ஜி தங்கு தடையில்லாமல் கிடைக்கும்
Jio 5G: சீன நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ; ஏர்டெல் - VI கலக்கம்; மாஸ் பிளான் பின்னணி title=

ஜியோவின் ஸ்கெட்ச்

இந்தியா டெலிகாம் துறையில் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் ஜியோ, அடுத்த இரண்டு ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை கொண்டு சேர்க்கும் முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காக இப்போதே பல ஸ்கெட்சுகளை போடத் தொடங்கியிருக்கிறது. இப்போது, சீன நிறுவனமான ஒன்பிளஸ் (One Plus) உடனும் கூட்டணி அமைத்திருப்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இந்த கூட்டணி மூலம் ஜியோ 5ஜி நெட்வொர்க் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 16 ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | விரைவில் வெளியாகும் ஜியோ 5ஜி போன்! கம்மி விலையில் இத்தனை சிறப்பம்சங்களா?

ஜியோ 5G ஸ்பெஷல்

ரிலையன்ஸ் ஜியோவின் ஸ்டேண்ட்அலோன் 5G நெட்வொர்க் என்பது இந்திய சந்தைக்கு வரும் மற்ற 5ஜி சேவைகளை விட வேகமாக இருக்கும். 4 ஜி நெட்வொர்க் கோரில் 5 ஜி நெட்வொர்க்கை ஓவர்லெய்டு செய்து கொடுக்காமல், 5ஜி நெட்வொர்க் சேவைக்காக பிரத்யேகமாக 5ஜி நெட்வொர்க் கோர் உருவாக்கி அதன் மூலம் 5ஜி நெட்வொர்க்கை கொடுக்க இருக்கிறது. இது ஜியோவின் 5ஜி ஸ்டேண்ட் அலோன் 5ஜி சேவையாகும். இந்த திட்டத்தின் கீழ் ஜியோவின் 5ஜி நெட்வொர்க் அனைத்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கும். 

5ஜி நெட்வொர்க் நகரங்கள்

இப்போது 5ஜி சேவையானது டெல்லி, சென்னை, மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்  உள்ளிட்ட 33 நகரங்களில் கிடைக்கிறது. 

மேலும் படிக்க | தேரை காருன்னு இறக்கிவிட போறானுங்க! மாருதி ஜிம்னி-ஐ கேள்விப்பட்டிருக்கீங்களா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News