பொதுவாக அரசியல் தலைவர்கள் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்துவார்கள். எல்லோரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படும் வகையில் திருமணத்தை நடத்துவார்கள். முக்கிய பிரமுகர்களை கூப்பிட்டு அமர்க்களப்படுத்தி விடுவார்கள். அதிலும் இந்தியாவின் நிதியையே கட்டுப்படுத்தும் நிர்மலா சீதாராமன் நினைத்து இருந்தால் மிக பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி இருக்கலாம். ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பர்கலா வங்மாயிக்கு கர்நாடகாவில் வியாழக்கிழமை எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் மற்றும் விவிஐபி விருந்தினர்கள் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய உதவியாளரான பிரதிக் தோஷியை திருமணம் செய்து கொண்டார். பிரதிக் தோஷி யார்?
பிரதிக் தோஷி, பிரதமர் அலுவலகத்தில் (PMO) சிறப்புப் பணியில் உள்ள அதிகாரி. அவர் ஆராய்ச்சி மற்றும் உத்தி பிரிவுக்கான சிறப்பு அதிகாரி அவர் 2014 முதல் பிஎம்ஓவுடன் தொடர்புடையவர். தோஷி குஜராத்தைச் சேர்ந்தவர். அவர் ஜூன் 2019 இல் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் மேலாண்மைப் பள்ளியில் எம்பிஏ படித்தவர். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, முதல்வர் அலுவலகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினார். இத்தனை முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக ஆக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் அரசியல் பின்புலம் இல்லாத, பிஸ்னஸ்மேன் குடும்பத்தை சேர்ந்தவர். தோஷி பிரதமர் நரேந்திர மோடியின் கண்கள் மற்றும் காதுகளாக பணியாற்ற கூடியவர் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன், அவர் சந்திக்கும் நபர்கள் குறித்த விபரங்களை பிரதமருக்கு அளிக்கிறார்.
நிர்மலா சீதாராமனின் மகளான பர்கலா வாங்மயி ஒரு பத்திரிகையாளர் மற்றும் கட்டுரையாளர். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. படித்தவர். மேலும், அவர் அமெரிக்காவில் இருந்து இதழியலில் முதுகலை அறிவியல் பட்டத்தை முடித்தார். அவர் கலை, புத்தகங்கள், வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்பம் பற்றி அதிகம் எழுதுகிறார்.
உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள் மற்றும் ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். அதமாரு மடத்தின் வேதமுறைப்படி இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நெருங்கிய ரத்த சொந்தங்கள் மட்டுமே திருமணத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இப்படி அவர் எளிமையாக திருமணத்தை செய்தது பாராட்டுகளை பெற்றுள்ளது.
Union Finance Minister Nirmala Sitharaman's daughter got married in Bangalore yesterday. This news never appeared in any Tamil or English media. pic.twitter.com/9bgTzLZiNr
— Anil_Jacob_IV (@follow_amj) June 8, 2023
உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளில் ஒருவர் என போர்ப்ஸ் இதழலால் பட்டியலிடப்பட்ட நிர்மலா சீதாராமன் தனது மகளின் திருமணத்தை மிக எளிமையாக நடத்தியுள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. மேலும் நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் போன்ற பல பெருமைகளை பெற்ற அவர், நாட்டிற்கே பட்ஜெட் போட்டாலும், தனது மகளின் திருமணத்தை மிக எளிமையாக எவ்வித ஆடம்பரமும் இன்றி பாரம்பரியம் மாறாமல் நடத்தியுள்ளார் என பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் ப்ரகலா பிரபாகரும் அரசியல் வட்டாரத்தில் நன்கு பரிட்சயமானவர். பெற்றோர் இருவரும் அரசியல் பின்புலம் கொண்டிருந்தாலும் மகளின் திருமணம் எளிமையாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ