பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை: மருத்துவமனை அறிக்கை

பிரணாப் முகர்ஜியின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை; முன்னாள் ஜனாதிபதி இன்னும் வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்

Written by - ZEE Bureau | Last Updated : Aug 21, 2020, 06:09 PM IST
பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை: மருத்துவமனை அறிக்கை

புது டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் (Pranab Mukherjee) நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, அவர் வென்டிலேட்டர் உதவியுடன், செயற்கை காற்று ஆதரவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அவரது முக்கிய உடல் உறுப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

ALSO READ |  சுதந்திர தினத்தை தவறாமல் கொண்டாடி வந்த பிரணாப் முகர்ஜீ: மகள் ஷர்மிஷ்டா முகர்ஜீ

பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (Army's Research and Referral Hospital) அனுமதிக்கப்பட்டார் மற்றும் மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்பொழுது அவருக்கு COVID-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, அவருக்கு நுரையீரல் தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சை குறித்து சிறப்பு மருத்துவ குழுவினர் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

ALSO READ |  வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: ஜனநாயகத்திற்கு சவால்? பிரணாப் அறிக்கை

"ஸ்ரீ பிரணாப் முகர்ஜியின் மருத்துவ நிலை அப்படியே உள்ளது. அவர் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் செயற்கை சுவாசக்காற்றோட்டம் ஆதரவில் தொடர்ந்து வருகிறார். அவரது முக்கிய உறுப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்து வருகிறார்" என்று மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

More Stories

Trending News